Pages

Tuesday, December 5, 2017

புலிச்சுறா தாக்கி இந்திய வம்சாவளி பெண் மரணம்!

அதிரை நியூஸ்: டிச.05
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த 49 வயது ரோஹினா பண்டாரி என்கிற இந்திய வம்சாவளிப் பெண் புலிச்சுறா (Tiger Shark) தாக்கியதால் உயிரிழந்தார்.

கோஸ்டா ரிகா நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்த இவர் 18 பேர் கொண்ட குழுவினருடன் இணைந்து கோகோஸ் தீவில் (Cocos Island) 'ஸ்கூபா டைவிங்' (Scuba Diving) எனப்படும் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது 26 வயது பயிற்சியாளரும் உடனிருந்தார்.

புலிச்சுறா ஒன்று ஆவேசத்துடன் தாக்கவருவதை கண்ட பயிற்சியாளர் அதை அச்சுறுத்தி விரட்ட முயன்றார் எனினும் அந்தச் சுறா ரோஹினா பண்டாரியை கடுமையாக தாக்கியதில் அவரது 2 கால்களும் பலத்த காயமடைந்தன. அவரது பயிற்சியாளருக்கும் காயங்கள் எற்பட்டன.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரோஹினா பண்டாரி அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவருடைய முன்னோர்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து சென்று அமெரிக்காவில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source:  Hindustan Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...