Pages

Saturday, December 9, 2017

அமெரிக்காவின் ஆடு பகை குட்டி உறவு சட்டத்தால் தம்பதியர் நாடு கடத்தல்!

அதிரை நியூஸ்: டிச.09
அமெரிக்காவின் ஆடு பகை குட்டி உறவு சட்டத்தால் தம்பதியர் நாடு கடத்தப்பட்டனர்.

தனது சொந்த நாட்டில் தலைவிரித்தாடிய வன்முறையிலிருந்து தப்பிப்பதற்காக அமெரிக்காவின் அண்டை நாடான மெக்ஸிக்கோவிலிருந்து 1989 ஆம் ஆண்டு ஆஸ்கர் கம்போஸ் என்பவர் டெக்ஸாஸ் மாகாண எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோத குடியேறியாக உள்ளே நுழைந்தார். பின்பு நியூ ஜெர்ஸியின் பிரிட்ஜ்டோன் என்ற பகுதியில் அவரும் அவரது மனைவி ஹம்பெர்டா என்பவரும் கடந்த 30 வருடங்களாக நிலத்தை பண்படுத்தி தரும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தனர்.

இத்தம்பதிக்கு 3 குழந்தைகளும் அமெரிக்காவில் பிறந்துவிட்ட நிலையில் அமெரிக்காவில் சட்டப்படி குடியிருக்க அல்லது வேலைவாய்ப்பு விசாவின் கீழ் இருக்க போராடிப் பார்த்தார்கள் எனினும் அமெரிக்கா குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டு விட்டனர். சட்டப் போராட்டங்கள் எதுவும் பலனளிக்கவில்லை.

அதேவேளை அவர்களின் 16, 22 மற்றும் 24 வயதுடைய குழந்தைகளை மட்டும் சட்டப்படி அமெரிக்க குடிமக்களாக ஏற்றுக் கொண்டுள்ளதால் தம்பதியர் மட்டும் குழந்தைகளை பிரிந்து சொந்த நாட்டிற்கு வெள்ளிக்கிழமையன்று வழுக்கட்டாயமாக அனுப்பப்பட்டனர்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...