Pages

Wednesday, December 6, 2017

பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் ~ தஞ்சையில் கருஞ்சட்டை அணிந்து தமுமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.06
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபர் மஸ்ஜீத் இடிப்பு தினமான டிசம்பர் 6 ஐ பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அறிவித்து, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், தஞ்சை ரயில் நிலையம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். மமக மாவட்டச் செயலர் எம்.ஜபருல்லாஹ், தமுமுக/மமக இன்ஜினியர் ஏ. முகமது இலியாஸ், ஜி.முகமது செல்லா, தமுமுக தஞ்சை (வடக்கு) மாவட்ட பொருளாளர் எம். முகமது சலீம், மமக தஞ்சை (வடக்கு) மாவட்ட பொருளாளர் புலவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாநிலப் பேச்சாளர் கோவை. ஜெய்னுல் ஆபிதீன், மமக மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் சரவண பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலர் ரவிக்குமார், மாநில ஊடகப் பிரிவு துணைச்செயலாளர் ஃபவாஸ்கான், தஞ்சை மாவட்ட ( வடக்கு) செயலாளர் பி.ராஜ்முகமது, ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் சதா.சிவகுமார், காங்கிரஸ் கட்சி தஞ்சை மாநகர் தலைவர் ராஜேந்திரன், சிபிஐ (எம்) மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன், திராவிடர் கழகம் சு.முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

இதில், தஞ்சை வடக்கு, தெற்கு மாவட்டங்களை சேர்ந்த தமுமுக, மமக மற்றும் அதன் தோழமை கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் நீதி கேட்டு முழக்கமிட்டனர். தமுமுக மாவட்டச் செயலர் ஏ.சேக் மைதீன் வரவேற்றார். ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட துணைச் செயலர் தஞ்சை ரியாஸ் அகமது நன்றி கூறினார்.

முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக சார்பில் அதன் தலைவர் எம். சாகுல் ஹமீது தலைமையில், சுமார் 33 வாகனங்களில் தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அழைப்பின் பேரில், திமுக அதிரை பேரூர் செயலர் இராம.குணசேகரன், துணைச்செயளாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் உள்ளிட்ட திமுகவினர் போராட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...