Pages

Thursday, December 14, 2017

கடற்கரைத்தெருவில் பழுதடைந்த கழிவு நீர் வடிகால் சீரமைப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட கடற்கரைத் தெரு பகுதிகளில் உள்ள கழிவு நீர் வடிகாலில் ஏற்பட்ட பழுத்தால் கழிவு நீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நின்று துர் நாற்றம் வீசி வந்தது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் இருந்தது. இதுதொடர்பாக கடற்கரைத் தெரு ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அமீரக அமைப்பு ஆலோசனையின் பேரில், அப்பகுதியில் இயங்கி வரும் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்றத்தினர், அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகச் செயல் அலுவலரை அண்மையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் முதல் கட்டமாக, அதிக அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவு நீர் வடிகால் பகுதியில் உள்ள பழைய குழாய்களை அகற்றிவிட்டு, புதிதாக 6 அடி நீளமுள்ள மொத்தம் 7 சிமெண்ட் பைப் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணியில், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவுப்பணி கண்காணிப்பாளர் முத்துக்குமார் மேற்பார்வையில், துப்புரவுப் பணியாளர்கள் இன்று வியாழக்கிழமை காலை ஈடுபட்டனர்.

கடைசி செய்தி:
ஜே.சி.பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழாய்கள் புதைக்க வேண்டுமென, தீனுல் இஸ்லாம் நற்பணி மன்றம் மற்றும் அப்பகுதியினர் வைத்து கோரிக்கையின் அடிப்படையில் குழாய்கள் புதைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...