Pages

Friday, December 22, 2017

இஸ்லாமியர்களின் மையவாடி ஆக்கிரமிப்புகளை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - ஜமாஅத் எச்சரிக்கை

பேராவூரணி டிச.22
சேதுபாவாசத்திரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மையவாடி இடத்தை மீட்டுத்தர வலியுறுத்தி டிச 26 ந்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என இஸ்லாமிய ஜமாஅத்தார்கள் அறிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த சேதுபாவாசத்திரம், புதுத்தெரு இஸ்லாமிய மக்களுக்கு சொந்தமான மையவாடி (இடுகாடு) சேதுபாவாசத்திரத்தில் உள்ளது. 4.5 (நான்கரை) ஏக்கர் நிலம், பல ஆண்டுகாலமாகவே இஸ்லாமியர்களின் அனுபோகத்தில்  இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் காலப்போக்கில், வேறு சிலர் இந்த மையவாடியையொட்டி குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தனர். இதனால் மையவாடி இடம் 3.5 (மூன்றரை) ஏக்கராக நிலமாக சுருங்கி விட்டது எனக்கூறப்படுகிறது.

இந்த இடத்தை கழுமங்குடா கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, இறந்தவர்களை அடக்கம் செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மையவாடி இடத்தை மீட்டுத்தரவேண்டும் என சேதுபாவாசத்திரம், புதுத்தெரு இஸ்லாமிய மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், கோட்டாட்சியர், டிஎஸ்பி,  வட்டாட்சியர் என அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி டிச 26 அன்று தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகளை திரும்ப ஒப்படைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து இஸ்லாமிய ஜமாஅத் நிர்வாகி முகமது மீராசா கூறுகையில்,
"கடந்த 2014 ஆம் ஆண்டு சேதுபாவாசத்திரம் பகுதியில் இறந்து போன இஸ்லாமியரை அடக்கம் செய்வதற்காக, இஸ்லாமிய இளைஞர் மன்றத்தினர் இடத்தை வெட்டி சுத்தம் செய்த போது, அருகில் உள்ள கழுமங்குடா கிராமத்தை சேர்ந்த வேறு மதத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் பிறகு சேதுபாவாசத்திரம் புதுத்தெரு ஜமாஅத்தினர், தஞ்சை வக்பு வாரிய அலுவலகம் சென்று சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகளை அணுகியபோது. அதிகாரிகள் இடத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றை கேட்டனர்.

கிராமத்தினர் உடனடியாக ஊர்வந்து பட்டாவை தேடியபோது,
அது ஜமாஅத் பெயரில் பதிவு செய்யப்படாமல், மரக்காவலசை கிராமத்தை சேர்ந்த ஒரு நபரின் பெயரில் இருந்துள்ளது. அவரது குடும்பத்தினர் எங்களது முன்னோர் மையவாடிக்காக தானமாக வழங்கிய இடம், நாங்கள் வந்து பத்திரப்பதிவு செய்து தருகிறோம் எனச் சொல்லி விட்டனர்.

இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, பொலிகல்லை ஊன்றி வேலி அமைத்து பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர். சட்டபூர்வமான வகையில் அந்த இடத்தை அரசே மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் தாய், பிள்ளைகளாய் பழகி வரும் இரு சமுதாய மக்களிடையே கசப்புணர்வு வரக்கூடாது. அரசே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...