Pages

Monday, December 4, 2017

இந்தியாவில் ஒருவரை ஜெயிலில் தள்ளிய சாக்ஸ் நாற்றம்!

அதிரை நியூஸ்: டிச.04
சாக்ஸ் (காலுறை) நாற்றத்தை அனுபவிக்காதவர்கள் யாருமிருக்க வாய்ப்பில்லை அதிலும் வளைகுடா வாசிகளுக்கு 'யப்பா' சொல்ல வேண்டியதேயில்லை எனும் கட்டாய அனுபவம் ஏற்பட்டிருக்கும் ஆனால் யாரையும் ஜெயிலில் தள்ளுமளவிற்கு சென்றிருக்காது.

ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து டெல்லி சென்ற ஒரு பேருந்தில் பயணித்த ஒருவர் 'ஹாயாக' தனது ஷூவை கழட்டிவிட்டு சாக்ஸை (காலுறையை) அகற்றி ஜன்னலோரம் தொங்கவிட்டுள்ளார், வந்தது வினை.

சாக்ஸிலிருந்த கிளம்பிய துர்நாற்றம் பஸ் பயணிகளை நெளிய வைத்துள்ளது. பக்கத்து இருக்கைகாரருடன் வாய்த்தகராறில் துவங்கிய மோதல் கைகலப்பு வரை சென்றுள்ளது. விளைவு, ஓட்டுனர் பேருந்தை பாதுகாப்பாக போலீஸ் நிலையத்தில் நிறுத்தினார்.

விசாரித்த போலீஸார் துர்நாற்றக் காலுறையின் சொந்தக்காரர் மீது பொது இடத்தில் தொல்லை தரும் குற்றத்தின் கீழ் (arrested on charges of causing public nuisance) வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். பின்பு ஒருவழியாக ஜாமினில் விடுதலையானவர் தன்னுடன் சண்டையிட்ட சக பயணிகள் மீது தனக்கு தொல்லை தரும் நோக்குடன் நடந்து கொண்டதாக புகார் தெரிவித்துவிட்டு வேறொரு பஸ்ஸை பிடித்து டெல்லிக்குச் சென்றார்.

கூடுதல் தகவல்:
உலகளவில் ஃபிரான்ஸ் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாட்டினரே அதிகம் நாற்றம் பிடித்த சாக்ஸ் அணிகிறார்களாம், இவர்களுக்கு அடுத்த இடத்தில் வருபவர்கள் ஜெர்மனி மற்றும் பிரிட்டன்காரர்கள் என மிக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

Source: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...