Pages

Friday, December 8, 2017

அதிரையில் அமோக வரவேற்பை பெறும் மூலிகை டீ (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் குலாம் தஸ்தகீர். இவர் கடைத்தெரு பகுதியில் 'ஜல்கோபியா 108 ஜூஸ் கார்னர்-கேட்டரிங் சர்வீஸ்' என்ற பெயரில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இங்கு தினமும் மாலை நேரத்தில் தயாரித்து விற்பனையாகும் மூலிகை டீ  இப்பகுதியினரின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மருத்துவகுணம் வாய்ந்த மூலிகை டீயை பலர் விரும்பி பருகுகின்றனர்.

இதுகுறித்து குலாம் தஸ்தகிர் கூறியது;
பால் இல்லாமல் புதினா, மல்லி, லெமன், ஓமம், கருப்பட்டி, பனைவெல்லம், சுக்கு ஆகியவற்றைக் கொண்டு மூலிகை டீ தயாரித்து விற்பனை செய்கிறேன். இவை உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக உள்ளது. குறிப்பாக உடல் செரிமானம், உடல் சூடு தனிய, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடலில் உள்ள கொழுப்புகள் நீங்க பயன்படுகிறது. தினமும் 500 டீ  வரை விற்னையாகிறது. டீ விலை 6 ரூபாய். மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்கிறேன். இங்கு தினமும் வாடிக்கையாளர்கள் உற்சாகத்துடன் டீ பருகுகின்றனர். இதில் சிலர் வீட்டிற்கும் பிளாஸ்கில் வாங்கிச் செல்கின்றனர். மேலும், கடந்த டிச.1 ந் தேதி முதல் பாலில், நன்னாரி, ஏலகாய், மிளகு, பனைவெல்லம் கலந்து 'டீ' விற்பனை செய்கிறேன். இவை, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...