Pages

Friday, December 8, 2017

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் கண் பார்வையிழந்த சமூக ஆர்வலர் கோரிக்கை!

அதிராம்பட்டினம், டிச.08
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுத்தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜப்பார். சமூக ஆர்வலரான இவர் கண் பார்வை இழந்தவர். இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி உட்பட்ட கடைத்தெரு செல்லும் சாலையோரத்தில் அமைந்துள்ள பகுதியில் புதிதாக கழிவு நீர் வடிகால் கட்டித்தரக் கோரி இன்று வெள்ளிக்கிழமை அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
'அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட கடைத்தெரு செல்லும் சாலை பாரத ஸ்டேட் வங்கி பகுதி முதல், எஸ்.ஏ.எச் டவர் வரை அமைந்துள்ள சாலையில் கழிவு நீர் வடிகால் கடந்த 6 ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ளது. இதனால் கழிவு நீர் சாலையில் வெளியேறி சுகாதரச் சீர்கேடு ஏற்படுகிறது. ஆகவே, இப்பகுதியில் புதிதாக கழிவு நீர் வடிகால் கட்டித்தருவதற்கு அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என மனுவில் கூறப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...