Pages

Tuesday, December 5, 2017

இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து கண்டுபிடிக்கும் முகாம் திறப்பு (படங்கள்)

பேராவூரணி டிச.05
தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர்  டாக்டர் ஆ.சுப்பிரமணி  ஆலோசனைப்படி  செவ்வாய் கிழமை (05.12.2017) காலை ஐஎஸ்ஓ  உலகத் தரச்சான்றிதழ் பெற்ற மேம்படுத்தப்பட்ட செருவாவிடுதி
வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,  கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படக்கூடிய இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு கண்டுபிடிக்கும் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில துணைத்தலைவரும், பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி தாளாளருமான டாக்டர் ஜி.ஆர்.ஶ்ரீதர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில்  கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய கர்ப்பிணி தாய்மார்கள் (High Risk Mother ), 2, 3 குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு முறையை கடைபிடிக்காத தாய்மார்கள் (Hiher order Birth) ஆகியோர்களுக்கு ஆலோசனை சிகிச்சை  வழங்கப்பட்டது.

முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான இயற்கை உணவு வழங்கும் வகையில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறித்தோட்டத்தை  வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, மருத்துவ கழிவுக்கான (BIO MEDICAL WASTE) அறையை  மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரெங்கநாதன் ஆகியோர்  திறந்து வைத்தனர். சிறப்பு அழைப்பாளர் ஜே.சி. குமரப்பா பள்ளி தாளாளரும், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில துணைத்தலைவருமான டாக்டர் ஜி.ஆர்.ஶ்ரீதர் அவர்கள் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து உணவினை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் ரகுராமன், பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன், தொடக்க கல்வி அலுவலர்கள் திருவோணம் நடராஜன், பேராவூரணி தமிழ்செல்வி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி, குமரப்பா கல்வி  அறக்கட்டளை அறங்காவலர் பொறி அஸ்வின் ஶ்ரீதர், டாக்டர்கள் ரஞ்சித், சிவரஞ்சனி், தீபா, கிருத்திகா, கோகிலா, வெங்கடேஷ், ஹம்சா, கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...