Pages

Friday, December 8, 2017

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் சார்பில் படை வீரர் கொடி நாள் நிதி வசூல் ஊர்வலம் !

அதிராம்பட்டினம், டிச.08
டிச.7 இந்திய படைவீரர் கொடி நாள் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி சார்பில், கொடி நாள் நிதி திரட்டும் பணி பட்டுக்கோட்டையில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில், பள்ளி மாணவ, மாணவிகள் கொடி நாள் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பட்டுக்கோட்டையில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று கொடிநாள் நிதியை பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் நிதி பெற்றனர். இந்த நிகழ்ச்சியினை பள்ளித் தாளாளர் வீ.சுப்பிரமணியன், பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் எஸ்.சுப்பையன் செய்து இருந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...