Pages

Wednesday, December 6, 2017

பாபர் மஸ்ஜித் வழக்கில் நீதி கோரி பட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, டிச.06
பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட வேண்டும், இடித்த குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும், உச்ச நீதி மன்றம் சட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நியாமான தீர்ப்பு வழங்க வேண்டும், நீதிக்காக அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, எஸ்.டி.பி.ஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகம்மது இலியாஸ் தலைமை வாகிதார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக அக்கட்சியின் மாநில பேச்சாளர் நெல்லை எம். மஹ்பூப் அன்சாரி ஃபைஜி, பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன், கேம்ஸ் ஃப்ரண்ட் மாநில செயலாளர் ரியாஸ் அஹமது ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

முன்னதாக, எஸ்.டி.பி.ஐ. கட்சி பேராவூரனி தொகுதி செயலாளர் சேக் தாவூத் வரவேற்றார். தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் அபுல் ஹசன், ரஜினிஸ், பெருளாளர் சேக் ஜலால், வர்த்தக அணி தலைவர் செய்யது முகம்மது, WIM மாவட்டத் தலைவி ஆமினா சேக் ஜலால்,  உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்ட முடிவில், எஸ்டிடியூ தொழிற்சங்கத் தலைவர் அமானுல்லா நன்றி கூறினார். இதில், பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாபர் மஸ்ஜீத் வழக்கில் நீதி வழங்கக் கோரி முழக்கமிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...