Pages

Saturday, December 2, 2017

அதிரையில் தேங்கி நின்ற மழை நீரை அகற்றும் பணியில் தன்னார்வல இளைஞர்கள் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி தரகர்தெரு மஹல்லாக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கிக் காணப்பட்ட மழை நீரை அகற்றும் பணியில் அப்பகுதி தன்னார்வல இளைஞர்கள் இன்று சனிக்கிழமை காலை ஈடுபட்டனர்.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது இடைவெளி விட்டு தொடர் மழை பெய்தது. இதனால் குடியிருப்புப் பகுதி மற்றும் சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கிக் காணப்பட்டதால், இப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் தரகர்தெரு இஸ்லாமிய நற்பணி மன்றத் தலைவர் முகமது ஷாபி தலைமையில், நிர்வாகிகள் அதிரை மைதீன், முபீத், தூபான், யூனுஸ் கான், இதயதுல்லா, மஹ்தூம், ராஜா முகமது, நியாஸ்கான்,  சபானுதீன், நதீம், பசுருதீன், ஜமீல் ஆகியோர் இணைந்து மழை நீரை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இவர்களது தன்னலமற்ற பொதுநலச் சேவைப்பணியை இப்பகுதியினர் பாராட்டினர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...