Pages

Sunday, December 3, 2017

அதிரையில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாக் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.03
இன்று டிச.3ம் தேதி, 'சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகள் தின விழா சங்க அலுவலகத்தில் இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, சங்கத் தலைவர் ஹாஜா ஷெரீப் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிராஜுதீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, முன்னாள் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, ஜெஹபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோருக்கு அரசின் இலவச பஸ் பாஸ், நலச்சங்க ஏழை எளிய உறுப்பினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, விடுபட்ட நல அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு அரசின் மாதாந்திர உதவித்தொகை ஆகியன வழங்க வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நலச்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...