Pages

Sunday, December 10, 2017

துபையில் வரும் வியாழன் இரவு விண்கல் மழை பொழியும்!

அதிரை நியூஸ்: டிச.10
கண்கவர் விண்கல் மழை (Spectacular Geminid meteor shower) வரும் வியாழன் இரவு பொழியும் என்றும் இவற்றை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் துபை வானியல் குழுமம் தெரிவித்துள்ளதுடன் விண்வெளி ஆர்வலர்கள் இந்த நட்சத்திர மழையை பார்த்து ரசிப்பதற்கான சிறப்பு முகாம் ஒன்றையும் துபை அல் குத்ரா ஏரி அருகே நடத்தவுள்ளது. இதற்கான டிக்கெட் ஆன்லைன் முன்பதிவுகளும்  Q-Tickets.com இங்கு உண்டு அல்லது அல் துரையா அஸ்ட்ரானமி சென்டரை (Al Thuraya Astronomy Center) அனுகவும்.

இந்த விண்கல் மழை பொதுவாக டிசம்பர் 4 முதல் 16 வரை நிகழ்ந்தாலும் அதன் உச்சபட்ச எரிகல் மழை டிசம்பர் 14 ஆம் தேதி அன்று காணக் கிடைக்கும் என்றும் மணிக்கு சுமார் 120 எரிகற்கள் என வானில் வர்ண ஜாலங்கள் நிகழ்த்தும் என்றும் இந்த வானவேடிக்கையை பார்ப்பதற்கு உகந்த நேரம் எதிர்வரும் வியாழன் பின்னேரம் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை என்றும் துபை வானியல் குழு தெரிவித்துள்ளது.

வெறும் கண்களால் ரசிப்பதற்கான டிப்ஸ்:
1. பொறுமையுடன் காத்திருப்பவர்கள் மட்டுமே இதை ரசிப்பதற்கு ஏற்றவர்கள், எந்த நேரத்திலும் பொழியும் எரிகல் மழையை பார்ப்பதற்காக நீண்ட நேரம் வானத்தை உற்று நோக்கியவர்களாக இருக்க வேண்டும்.
2. முதலில் ஊரை விட்டு விலகிய, மின் வெளிச்சங்கள் இல்லாத திறந்தவெளி பகுதிக்கு செல்லவும்.
3. ஒரு போர்வை அல்லது ஒரு நாற்காலியை அமர்ந்து ரசிப்பதற்காக எடுத்துச் செல்லலாம், வெறும் தரையில் அமர்ந்து பார்ப்பதற்கும் தடையில்லை.
4. செல்லுமுன் உங்கள் பகுதியில் சந்திரனின் உதயம் மற்றும் மறைவு நேரத்தை குறித்துக் கொள்ளவும், காலநிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.
5. தொலைநோக்கிகள் தேவையில்லை, வெறும் கண்களால் தரிசிக்கலாம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...