Pages

Wednesday, December 13, 2017

கிரசண்ட் மெட்ரிக். பள்ளி பொன்விழா ஆண்டையொட்டி குழுவினர் அதிரை வருகை (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.13
சென்னை கிரசண்ட் மெட்ரிக். பள்ளி 50 ஆம் ஆண்டு பொன்விழா ஆண்டையொட்டி, பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், அதன் நிறுவனர், பிரபல கல்வியாளரும், தொழில் அதிபருமாகிய பி.எஸ் அப்துர் ரஹ்மான் அவர்கள் ஆற்றிய சேவைகள் மற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும் விதத்தில், வாகன பிரசாரப் பயணம், சென்னை கிரசண்ட் மெட்ரிக். பள்ளியில், சீதாக்காதி டிரஸ்ட் பொதுமேலாளர் யு.என்.ஏ ஜலால் அவர்களால் கடந்த டிச.9 ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டு, தமிழகத்தில் நாகர்கோவில், திருவிதங்கோடு, திருநெல்வேலி, காயல்பட்டினம், தூத்துக்குடி, மதுரை, சக்கரக்கோட்டை, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டனர். இதில், பள்ளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகங்களில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு உணவு, உடை, மருந்து பொருட்கள் வழங்குவது, பி.எஸ் அப்துர் ரஹ்மான் அவர்கள் ஆற்றிய சேவைகள் மற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து மாணவர்கள் மத்தியில் உரை, நடமாடும் நூலகம் மூலம் புத்தகக் கண்காட்சி, காப்பங்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்குவது, ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள் போன்றரை சந்தித்து கலந்துரையாடுவது, அவர்களுக்கு 'அன்பின் முகவரி பி.எஸ் அப்துர் ரஹ்மான்' என்ற நூல் மற்றும் பி.எஸ் அப்துர் ரஹ்மான்' குறித்து இயற்றப்பட்ட பாடல்கள் அடங்கிய குறுந்தகடு அன்பளிப்பு உள்ளிட்ட பணிகளில் சலாஹுதீன், சுல்தான் அப்பாஸ் ஷாஜஹான் சேட், சல்மான் ஹுசைன், ராஜ்வீ, சம்சுதீன், அப்துல் அஜீஸ், பாலாஜி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதிக்கு இன்று புதன்கிழமை காலை இக்குழுவினர் வந்தனர். இக்குழுவினருக்கு, சென்னை கிரசண்ட் மெட்ரிக். பள்ளியில் கடந்த 1968 ஆம் ஆண்டு, முதல் பேட்ஜில் மாணவராக கல்வி பயின்ற பிரபல தொழில் அதிபர், சமூக ஆர்வலர், சிபோல் நிர்வாக இயக்குநர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன் அவர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அதிராம்பட்டினத்தில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு, முக்கிய பிரமுகர்களுக்கு 'அன்பின் முகவரி பி.எஸ் அப்துர் ரஹ்மான்' என்ற நூல்கள் மற்றும் பி.எஸ் அப்துர் ரஹ்மான்' குறித்து இயற்றப்பட்ட பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகள் அன்பளிப்பாக
வழங்கப்பட்டன. இதன்பின்னர், தஞ்சாவூர், நாகூர், பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களுக்கு செல்ல குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன் நிறைவு விழா வரும் டிச.16, 17 ஆகிய தினங்களில் சென்னை கிரசண்ட் மெட்ரிக். பள்ளியில் நடைபெற உள்ளது.

வாகன பிரசாரப் பயணம் குறித்து குழுவில் இடம் பெற்றுள்ள சலாஹூதீன் கூறியது (காணொளி);

'அன்பின் முகவரி பி.எஸ் அப்துர் ரஹ்மான்' என்ற நூல் வழங்கிய போது
செக்கடி மேடு walk-wayயில் பயிற்சி மேற்கொண்டபோது
கிரசெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் இல்லத்தில்
இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முதல்வருக்கு நூல் வழங்கிய போது
இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி வளாகத்தில்
சமூக பண்பலை வானொலி அதிரை FM 90.4 நிலையத்தில்
அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை கல்வெட்டை பார்வையிட்ட போது
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...