Pages

Wednesday, December 6, 2017

பாபர் மஸ்ஜீத் வழக்கில் நீதி கோரி அதிராம்பட்டினத்தில் பேரணி ~ கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச.06
பாபர் மஸ்ஜீத் வழக்கில் நியாமான தீர்ப்பு வழங்கக்கோரி மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில், தமிழகத்தில் 37 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக, பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று டிச.6 புதன்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, மஜக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் பேராவூரணி அப்துல் சலாம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஏ.எச் பைசல் அகமது, அதிரை பேரூர் பொருளாளர் எச். சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக அக்கட்சியின், மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் கே. ராவூத்தர்ஷா, மனிதநேய கலாசாரப்பேரவை பஹ்ரைன் மண்டலச் செயலர் வல்லம் ரியாஸ் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில், 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பாபர் மஸ்ஜீத் இடிப்பு வழக்கில் நியாமான தீர்ப்பு வழங்கக்கோரி முழக்கமிட்டனர்.

முன்னதாக, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் முக்கத்திலிருந்து பேரணியாகச் புறப்பட்டுச் சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். தொடக்கத்தில், அதிராம்பட்டினம் பேரூர் செயலர் எம்.ஐ முகமது செல்லராஜா வரவேற்றார். முடிவில் மருத்துவ அணி செயலர் சமீர் அகமது நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...