Pages

Sunday, December 17, 2017

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம்!

கோப்பு படம் 
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 52 வது மாதாந்திர கூட்டம் கடந்த 08/12/2017 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                     : அப்துல் ரஷீது ( செயலாளர் )
முன்னிலை          :  S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை      :  A. அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை             :  A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல்  : அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை    : A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:
1) ABM-ன் கடந்த 24 வருட பொது சேவைகளையும் ஏழை மக்களின் பொருளாதார உதவி செய்து வரும் நல்ல உள்ளங்களை பாராட்டியும், மேலும் அதில் ஒன்றான தையல் பயிற்சிக்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து பயனடையுமாறும் அதிரை வாசிகள் வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

2) மாதாந்திர சந்தா தொகையை மேலும் வலுப்படுத்தும் விஷயமாக அந்தந்த ஏரியாவில் உள்ள பொறுப்பாளர்களிடம் (ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொறுப்பாளர்களிடம்) கொடுத்து நமதூர் ஏழை எளிய மக்களின் பொருளாதார உதவிகளை செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

3) ஊர் நலன் கருதி பல நாடுகளில் உள்ள அதிரைவாசிகள் மேலும் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் மேம்படுத்தும் விதமாக நல்ல பலதரப்பட்ட திட்டங்களை ABM -ன் மூலமாக செம்மைப்படுத்திட உதவிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) புதிய வருடத்திற்கான ரியாத் பென்ஷன் திட்டத்திற்காக உதவிய அதிரை வாசிகள் அனைவருக்கும் தலைமையகம்  மற்றும் ரியாத் கிளையின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் JANUARY 2018 12-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...