Pages

Saturday, December 9, 2017

மல்லிபட்டினம் ECR மறியலில் ஈடுபட்ட மீனவர்களுடன் எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி சந்திப்பு!

மல்லிபட்டினம் டிச.09.
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினத்தில் பத்து நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்த மீனவர்கள், மீன் பிடிக்க அனுமதி டோக்கன் வழங்கக்கோரி இன்று சனிக்கிழமை காலை கிழக்கு கடற்கரை சாலையில் போராட்டம் நடத்தினர்.

இன்று சனிக்கிழமை ஈஸ்ட் கோஸ்ட் சாலை வழியாக ராமநாதபுரம் சென்ற மஜக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, போராட்டக்காரர்களை சந்தித்து பேசினார். பிறகு, மீனவர்களின் கோரிக்கையை கேட்டுக்கொண்டு இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசினர். மேலும், மீன் வளத்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.

அப்போது, மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரீஸ் மற்றும் மஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...