Pages

Sunday, December 3, 2017

துபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) ஒன்றுகூடல் சிறப்பு போட்டிகளில் பரிசு பெற்றோர் விவரங்கள் (படங்கள்)

ஐக்கிய அரபு அமீரகம் 46 ஆவது தேசியதின விடுமுறை நாட்களில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் (Get together) நிகழ்வு டிச-2, 2017 (சனிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து வயது தரப்பினருக்கும் பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.

மதியம் தமிழக சுவையுடன் தரமான உணவும், மாலை தேநீரும் வழங்கப்பட்டன. உள்நாடு மற்றும் பிற நாடுகளிலிருந்தும் ஊர் பிரமுகர்கள் கலந்து அமெரிக்கா. ஆஸ்திரேலியா, பஹ்ரைன் மற்றும் இந்தியாவிலிருந்தும் சிறப்பு பரிசுகள் ஸ்பான்சர் செய்யப்பட்டு நிகழ்வில் கலந்து கொண்டோருக்குப் போட்டிகள் மூலமும் குலுக்கல் மூலமும் வழங்கப்பட்டன.

அமீரகம் வாழ் மூத்த மஹல்லாவாசிகள் மற்றும் அமீரக, இந்திய தொழிலதிபர்கள், தொழில் முனைவோரும் மஹல்லாவாசிகளை வைத்து போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசு வென்றோர் விவரங்கள்:
முதுகுப் பந்து ஓட்டம்:
சல்மான் இஸ்மாயில் & ஹாருன் இஸ்மாயில்
சுஹைல் & அப்துல் கரீம்

சாக்கு ஓட்டம்:
முகைதீன் ஆஷிக்
உதுமான் சித்தீக்
சுஹைல் அபுதாலிப்

கூடைப்பந்து ( ஆண்கள்)
ராஜிக்
அகமது இப்ராஹீம்
முகமது இப்ராஹீம்

50 மீட்டர் ஓட்டம்
எப். சலீம்

லெமன் & ஸ்பூன் ( சிறுமிகள்)
மெஹ்னாஸ்
நவ்ராஹ்

சாக்லெட் கலெக்சன்:
ஷாக்கீர் பாசித்
அஜ்கா அப்துல் ரெஜாக்

பிஸ்கட் கவ்வுதல்:
ஷைனா இப்ராஹீம்
ஹாரூன் இஸ்மாயில்

கூடைபந்து (பெண்கள்)
ஆரிஃபா ஆஷிக்
சாதிக்கா மொய்னூதீன்

ஊசி நூல்கோர்த்தல்:
ரமீஜா முகமது
முஹ்ஸினா மீரா சாஹிப்

மிஸ்டு கால்:
எச். ஹநான் ஹில்மியா

ஆப்பிள் தோலுரித்தல்:
கர்மிலா யூசுப்
ஃபைரோஸா நெய்னா

50 மீட்டர் ஓட்டப்பந்தயம் ( நாற்பது வயதுக்கு மேற்பட்டோர்)
அப்துல் ஹமீது

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பெயர் விபரங்களை குலுக்கிப்போட்டு முறையே ஒரு பவுன், முக்கால் பவுன், அரை, கால் பவுன் தங்கக் காசுகள் எட்டுபேருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு ஐக்கிய அரபு குடியரசின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்ட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் நூறுக்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகள் குர்ஆன் கிராஅத்துடன் தொடங்கி நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றன.

செய்தி: என். ஜமாலுதீன்
படங்கள்: அப்துல் ஹமீது, எஃப். இப்ராஹீம்
 
 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...