Pages

Thursday, December 14, 2017

மேலத்தெரு குடியிருப்பு பகுதிகளில் சிசிடிவி காமிராக்கள் பொறுத்த TIYA கூட்டத்தில் முடிவு (படங்கள்)

அமீரக TIYA வின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 08.12.2017 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் வழமைபோல் துபையில் N. சேக்காதி  இல்லத்தில் அமீரக தலைவர் N. முகமது மாலிக் அவர்கள் தலைமையில், நிர்வாகிகள் மற்றும் முஹல்லாவாசிகள் முன்னிலையில் நடைபெற்றது.

பொருளாளர் S. மீரா முகைதீன் அவர்களின் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். இணைச் செயலாளர் B. அபுல் பரகத் முஹல்லாவாசிகள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதை தொடர்ந்து, கடந்த சுமார் 6 மாதங்களாக தாயக TIYAவின் புதிய நிர்வாகிகள் ஆற்றியுள்ள சேவைகள், இனி தொடரவுள்ள சேவைகள் என அனைத்தும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டதுடன் இப்பெரும் சேவைகளை துடிப்புடன் செய்து வரும் தாயகத்தின் புதிய TIYA நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அமீரக TIYAவின் வரவு செலவு விபரங்களை   பொருளாளர் S. மீரா, பொதுக்குழு உறுப்பினர்கள் முன் சமர்ப்பித்து விளக்கினார். கூட்டமுடிவில், கீழ்க்காணும் தீர்மானங்கள்  ஏகமனதாக நிறைவேற்றப்பட, கஃபாரா துஆவுடன் பொதுக்குழு நிறைவடைந்தது.

தீர்மானங்கள்:
1. அதிரையின் அனைத்து பகுதிகளிலும் பகல், இரவு நேரங்களில் தொடர் திருட்டுக்கள், கொள்ளை, வழிப்பறி, குழந்தை கடத்தல் போன்ற குற்றச்செயல்கள் பெருகியுள்ளதாக கிடைத்து வரும் தகவலை அடுத்து நமது மஹல்லா பொதுமக்களின் நன்மைக்காக முதற்கட்டமான நைட் விஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய 3 சி.சி.டிவி காமிராக்களை நிறுவதென முடிவு செய்யப்பட்டது.

2. மேலத்தெரு மஹல்லாவைச் சேர்ந்த வசதிகளற்ற 2 குடும்பத்தினர் தங்கள் வீடுகளுக்கு மேற்கூறை அமைத்துத் தருமாறு விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து உண்மைநிலை கண்டறியப்பட்டுள்ளதால், அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு தாயக TIYA நிர்வாகிகள் மூலம் தலா 10,000 ரூபாய் செலவில் தென்னங்கீற்றில் மேற்கூரை அமைத்துத் தர ஒப்புதல் தரப்பட்டது.

3. அதிராம்பட்டினம் மேலத்தெரு TIYA அலுவலக கட்டிடத்தை சீரமைத்தும்  முஹல்லா இளைஞர்களின் நீண்டநாள் கோரிக்கையான உடற்பயிற்சி மையம் மற்றும் நூலகம் ஒன்றை அங்கேயே ஏற்படுத்துவதற்கான பணிகளை இந்த வாரமே துவங்குவது எனவும், இதற்கான நிதி ஆதாரத்தை திரட்ட உள்ளூர் மற்றும் வெளிநாடுவாழ் நமது மஹல்லா சகோதரர்களை உதவி கேட்டு அணுகுவது எனவும் இதற்காக எழுவர் குழு ஒன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

4. பெண்கள் குளம் சம்பந்தமாக நமது முஹல்லாவின் தாஜூல் இஸ்லாம் சங்க தலைமை நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தை அமீரக TIYA பரிசீலித்த வகையில், இத்திட்டத்திற்காக பெருந்தொகை தேவைப்படுவதாலும், நீண்டகால திட்டமாக இருப்பதாலும் தற்போதைக்கு இக்கோரிக்கை ஒத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

5. புதுக்குளத்தில் கலக்கும் சாக்கடை கழிவுநீரை தடுத்து மாற்றுவழியில் கொண்டு செல்ல நமது மஹல்லா ஜமாஅத்துடன் இணைந்து தாயக TIYA நிர்வாகிகளும் நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் C.V. சேகர் அவர்களை நேரில் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து இப்பணியை செய்து தருமாறு கோரிக்கை மனு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இப்படிக்கு,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
அமீரக TIYA.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...