அதிரை நியூஸ்: ஜன.10
அமீரக பாஸ்போர்ட் மதிப்பு மேலும் உயர்ந்தது 133 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்
அமீரகத்தின் பாஸ்போர்ட் கடந்த 10 ஆண்டுகளாக அதன் சர்வதேச மதிப்பில் புயல் வேக முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மேலும் 12 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டவுடன் சர்வதேச தரப்பட்டியலில் மேலும் 28 இடங்கள் முன்னேறி தற்போது 33 இடத்தில் உள்ளது. இது எந்த சர்வதேச நாடும் காணாத அசூர வளர்ச்சியாகும் என ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் எனும் புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் ஜெர்மனி முதலிடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து கோலோச்சி வருகிறது. 2017 ஆம் வருடத்தை விட மேலும் ஒரு இடம் கூடுதலாக பெற்று 177 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம் என்ற நிலையை எட்டியுள்ளது. 176 நாடுகளுடன் இரண்டாம் இடத்தில் சிங்கப்பூரும், 175 நாடுகளுடன் 3 ஆம் இடத்தில் டென்மார்க், பினலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், நார்வே, சுவீடன் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவை திகழ்கின்றன.
கடந்த 2 வருடங்களாக பாகிஸ்தான், சிரியா, இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட்டுகள் கடைசி இடத்தை நிரப்பி வருகின்றன.
Source: Khaleej Times
தமிழில் : நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.