Pages

Sunday, January 28, 2018

துபை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட $20,000 மீட்பு!

அதிரை நியூஸ்: ஜன.28
நபிகள் நாயகம் நவின்றுள்ளார்கள்...
பாலைவனத்தில் காணாமல் போன ஒட்டகம் ஒருவனுக்குத் திரும்பக் கிடைக்கப்பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுமோ அதனை விட பல மடங்கு, பாவ மன்னிப்பு தேடும் அடியானைப் பார்த்து இறைவன் மகிழ்ச்சி கொள்கின்றான்.

மனிதன் செய்த பாவத்திற்கு மனிதன் கேட்கும் மன்னிப்பினால் இறைவனுக்கு எந்தவித பலனும் ஏற்படப் போவதில்லை. ஆனாலும் தன் மேல் நம்பிக்கை வைத்து தனது அடியான் மீளும்போது அதனை நினைத்து இறைவன் பேருவகை கொள்கின்றான்.

மேற்படி ஹதீஸில் காணாமல் ஓட்டகம் திரும்பக் கிடைப்பவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி இங்கு உவமையாக கூறப்பட்டுள்ளதைப் போல் துபை விமான நிலையத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் இது.

சவுதியிலிருந்து ஒரு ஆசிய நாட்டுப் பயணி துபை விமானம் நிலையம் வழியாக டிரான்ஸிட்டில் சென்றுள்ளார். அப்போது தான் வாழ்நாள் முழுவதும் உழைத்ததற்காக கிடைத்த கிராஜிவிட்டி பணம் (End of service benefits) 20,000 டாலர்கள் கொண்ட ஒரு பையை துபை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுச் சென்றுவிடுகின்றார். அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும், குடும்பத்தினரிடம் சந்தித்த அவமானங்கள் எல்லாம் உங்கள் கற்பனைக்கு.

இச்சம்பவம் நடைபெற்று 2 மாதங்கள் கழித்து துபை விமான நிலைய போலீஸார் ஒருவழியாக அவரை தேடித்தொடர்பு கொண்டு உங்களுடைய பணம் பத்திரமாக உள்ளது என ஒப்படைத்தால் எப்படி இருந்திருக்கும்! மீண்டும் மேற்படி நபிமொழியை உளப்பூர்வமாக வாசித்துப் பாருங்கள், இன்ஷா அல்லாஹ் நாமும் இனி உதவியையும் பாவ மன்னிப்பையும் அல்லாஹ்விடமே தொழுகையை கொண்டும், பொறுமையை கொண்டும் எதிர்பார்த்திருப்போமாக.

கடந்த வருடம் 1,175 புகார்கள் பெறப்பட்டு அனைத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாலும் துபை விமான நிலையங்களில் சீருடை அணிந்த ஒரு காவலரைக் கூட காண இயலாத ஆச்சரியத்தை கடந்த வருடம் துபை விமான நிலையங்களிலிருந்து பயணித்த சுமார் 91 மில்லியன் பயணிகளும் உணர்ந்திருப்பர். இது எப்படி சாத்தியமானது?

துபை விமான நிலையங்கள் முழுவதும் சுமார் 9,500 கேமிராக்கள் பொருத்தப்பட்டு செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. மேலும் காணாமல் போனது மற்றும் திரும்பக் கிடைத்தலை கண்காணிக்கும் துறையே ஒரு மேம்பட்டத் திட்டத்தின் (We have an advanced programme for lost-and-found items)  மூலம் இயக்கப்படுகின்றதால் தான் மேற்படி 20,000 டாலர் சம்பவத்தைப் போலவே பல சம்பவங்களை சொல்லிக்காட்ட முடியும்.

குறிப்பாக, ஒரு ஐரோப்பிய பெண் ஒருவர் 50,000 யூரோக்கள், மொபைல் போன்கள், கிரடிட் கார்டுகள், நகைகள், அசல் சான்றிதழ்கள் கொண்ட ஒரு பையை தொலைத்துவிட்டுச் சென்ற போதும், இன்னொரு ஐரோப்பியர் சுமார் 43,000 திர்ஹம் மதிப்புடைய ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை மறந்துவிட்டுச் சென்றபோதும், பல பெற்றோர்கள் குழந்தைகளையே மறந்துவிட்டுச் சென்ற போதும் அடையாளம் காணப்பட்டு அவரவரிடம் ஒப்படைக்க ஏதுவானது என துபை விமான நிலைய போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...