Pages

Thursday, January 4, 2018

தஞ்சை மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டில் காவல்துறை பதிந்த வழக்குகள் (முழு விவரம்)

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டில் சாலை விதிகளை மீறியதாக 2.35 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2017-ஆம் ஆண்டில் காவல்துறை பதிந்துள்ள வழக்குகள் விவரங்கள்: 
தஞ்சாவூர் மாவட்டத்தில், மொத்தம் 530 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 64% வழக்குகள் கண்டறியப்பட்டும், 391 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து ரூ. 2-1/4 கோடி மதிப்புள்ள களவாடப்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 2017-ஆம் ஆண்டில் 64 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் 63 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 91 சங்கிலி பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில், 87 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த ரவுடிகள் 43 பேர் மீது குண்டர் தடுப்புத் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக 3,367 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 76 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மணல் கடத்தல் தொடர்பாக 364 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 514 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், மணல் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 506 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விபத்தை தடுக்க கடந்த ஆண்டு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, சாலை போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக 2,35,761 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், குடி போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது  5341 வழக்குகளும், தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது 84207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து தொடர்பாக பொதுமக்களிடம் தக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, 4503 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் காவல்துறையினரால் நடத்தப்பட்டது.

மேலும், சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர்கள் மீது 43 வழக்குகளும், போதை பொருட்கள் விற்றவர்கள் மீது 274 வழக்குகள், புதுப்பட திருட்டு VCD/DVD விற்றவர்கள் மீது 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு குற்ற தடுப்பிற்கும், சாலை விபத்து தடுப்பிற்கும் கூடுதல் கவனம் செலுத்தும் பொருட்டு, மொத்தம் 877 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதிவேகமாக வாகனத்தை இயக்குவதுதான் சாலை விபத்துக்கு முக்கிய காரணம் என்பதை பொதுமக்கள் அறிய வேண்டும். எனவே, அதிவேகமாகவோ, குடிபோதையிலோ வாகனத்தை ஓட்ட வேண்டாம். தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும்' என மாவட்ட காவல்துறை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...