Pages

Thursday, January 4, 2018

துபையில் மின்சக்தி கார்களுக்கு 220 இலவச பார்க்கிங் ஸ்லாட் ஒதுக்கீடு!

அதிரை நியூஸ்: ஜன. 04
துபையில் மின்சக்தி கார்களுக்கு 220 இலவச பார்க்கிங் ஸ்லாட்டுகள் ஒதுக்கீடு

துபையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத முழுமையாக மின்சக்தியில் இயங்கும் கார்களை (Electrical Vehicle - EV) பொதுமக்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் நோக்கோடு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஷேக் ஜாயித் ரோடு உட்பட துபையின் பல இடங்களிலும் முதற்கட்டமாக 220 பார்க்கிங் ஸ்லாட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன, இது இன்னும் அதிகரிக்கப்படும். மின்சக்தி கார்களுக்கான நிறுத்தங்களில் வேறு வாகனங்களை நிறுத்தினால் 1,000 திர்ஹம் அபராதம் கட்டாயம் உண்டு.

ஏற்கனவே இந்த மின்சக்தி கார்களுக்காக (EV) துபையின் பல பகுதிகளிலும் சுமார் 100 மின்சார ரீசார்ஜ் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இங்கும் 2019 ஆம் ஆண்டு வரை இலசவமாக ரீசார்ஜ் செய்து கொள்ளும் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் 100 இலவச ரீசார்ஜ் மையங்கள் அடுத்த ஆண்டுக்குள் அமைக்கப்படவுள்ளன. மேலும் 50 ரீசார்ஜ் மையங்களையும் வடக்கு அமீரக பகுதிகளான ராஸ் அல் கைமா, புஜைரை, உம்மல் குவைன், அஜ்மான் ஆகிய எமிரேட்டுகளிலும் நிறுவப்படவுள்ளது.

மேலும் இலவச வாகன பதிவு (Free Registration), ஆண்டுதோறும் இலவச வாகன பதிவு புதுப்பித்தல் (Free Registration Renewal), இலவச சாலிக் டேக் (Free Salik Tag) மற்றும் மின்சக்தியில் இயங்கும் கார் என்பதை அடையாளப்படுத்தும் நம்பர் பிளேட்டுக்கான ஸ்டிக்கர் (Licence plate sticker identifying the vehicle as an EV) ஆகியவையும் கூடுதல் சலுகைகளாக வழங்கப்படுகின்றன.

டெஸ்லா வகை (Tesla) மின்சக்திகள் கார்கள் துபை டேக்ஸிக்களாக பயன்படுத்தப்படவுள்ள நிலையில் பொது போக்குவரத்திற்கான பஸ்களையும் மின்சக்தியில் இயங்கச் செய்வதற்கான சோதனை முயற்சிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...