Pages

Wednesday, January 10, 2018

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ~ பட்டுக்கோட்டை தொகுதியில் 2.30 லட்சம் வாக்காளர்கள் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (10.01.2018) புதன்கிழமை வெளியிட்டார்.

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, தஞ்சாவூர் மாவட்டத்தில் 03.10.2017 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை  9,57,526 ஆண் வாக்காளர்களும்,  9,93,055 பெண் வாக்காளர்களும், 73 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆகக் கூடுதல் 19,50,654 வாக்காளர்களாகும்.

03.10.2017 முதல் 15.12.2017 முடிய வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்திடக் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் மீது கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தகுதி அடிப்படையில் இன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 19,808 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 9,339 ஆண் வாக்காளர்களும், 10,450 பெண் வாக்காளர்களும், 19 மூன்றாம் பாலினத்து வாக்காளர்களும் ஆகக் கூடுதல் 19,808 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆண்டு கால இறப்பு பதிவேட்டின் அடிப்படையிலும், வாக்குசாவடி நிலை அலுவலர்களின் கள ஆய்வு மேற்கொண்டு சமர்ப்பித்துள்ள பதிவேட்டின் அடிப்படைடியிலும் மற்றும் உரிய ஆவணங்களின் அடிப்படையில் 03.10.2017 முதல் 15.12.2017 வரை வாக்காளர் பட்டியலிலிருந்து  25,900 ஆண் வாக்காளர்களும், 28,714 பெண் வாக்காளர்களும் ஆகக் கூடுதலாக 54,614 நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று  (10.01.2018) வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை  9,40,970 ஆண் வாக்காளர்களும், 9,74,786 பெண் வாக்காளர்களும், 92 மூன்றாம் பாலினத்து வாக்காளர்களும் ஆகக் கூடுதல் 19,15,848 வாக்காளர்களாகும்.

மேற்படி இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை தஞ்சாவூர் மாவட்ட மக்கள் தொகையில் 75.02 சதவீதமாகும்.

திருவிடைமருதூர் சட்ட மன்ற தொகுதியில் 1,18,809 ஆண் வாக்காளர்களும், 1,16,899 பெண் வாக்காளர்களும், 6 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக கூடுதல் 2,35,714ம், கும்பகோணம் சட்ட மன்ற தொகுதியில் 1,22,993 ஆண் வாக்காளர்களும், 1,26,322 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் ஆக கூடுதல் 2,49,316ம், பாபநாசம் சட்ட மன்ற தொகுதியில் 1,19,906 ஆண் வாக்காளர்களும், 1,22,614 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக கூடுதல் 2,42,530ம், திருவையாறு சட்ட மன்ற தொகுதியில் 1,24,115 ஆண் வாக்காளர்களும், 1,28,677 பெண் வாக்காளர்களும், ஆக கூடுதல் 2,52,792ம், தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதியில் 1,30,188 ஆண் வாக்காளர்களும், 1,39,370 பெண் வாக்காளர்களும், 49 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக கூடுதல் 2,69,607ம், ஒரத்தநாடு சட்ட மன்ற தொகுதியில் 1,11,165 ஆண் வாக்காளர்களும், 1,15,626 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக கூடுதல் 2,30,751ம், பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதியில் 1,10,919 ஆண் வாக்காளர்களும், 1,19,810 பெண் வாக்காளர்களும், 22 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக கூடுதல் 2,30,751ம், பேராவூரணி சட்ட மன்ற தொகுதியில் 1,02,875 ஆண் வாக்காளர்களும், 1,05,468 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் ஆக கூடுதல் 2,08,344ம், ஆகக் கூடுதல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,40,970 ஆண் வாக்காளர்களும், 9,74,786 பெண் வாக்காளர்களும், 92 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக கூடுதல் 19,15,848 வாக்காளர்கள் உள்ளனர்.

இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியல் நகல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்ட மன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மற்றும் வட்ட அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் ஆகியவற்றிலும் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படும். மேலும் வரும்  26.01.2018 அன்று நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபா கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படும். எனவே, அனைத்து வாக்காளர்களும், தமது பெயர் வாக்காளர் பட்டியலில் தவறேதுமின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை வாக்காளர் பட்டியலைப் பார்வையிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ஆண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்கத் தலைவர் காந்தி (அ.தி.மு.க.), கல்யாணசுந்தரம் (தி.மு.க.),  என்.கேசவன் (பாரதீய ஜனதா கட்சி), ஆர்.கே.செல்வக்குமார் (சிபிஐ), டி.சிவக்குமார் (தே.மு.தி.க), ஆர்.பழனியப்பன் (இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி), .பி.செந்தில்குமார் சிபிஎம் (எம்), கரிகாற்சோழன் (தேசியவாத காங்கிரஸ்), வட்டாட்சியர்கள் தங்கபிரபாகரன், ராமலிங்கம் (தேர்தல்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...