Pages

Friday, January 19, 2018

தஞ்சை மாவட்டத்தில் 2.34 லட்சம் குழந்தைகளுக்கு ஜன.28 ல் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அளிப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட  2,34,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வருகிற 28.01.2018  அன்று வழங்கப்படவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அளிப்பது தொடர்பான  ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் இன்று (19.01.2018) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
நமது மாவட்டத்தில் வருகின்ற 28.01.2018 அன்று 5 வயதிற்குட்பட்ட 2,34,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. போலியோ சொட்டு மருந்து  நகரப்பகுதியில் 128 மையங்களும், ஊரக பகுதிகளில் 1382 மையங்களும் ஆக மொத்தம் 1510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு அனைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இப்பணியில் 6040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும்,178 மேற்பார்வையாளர்களும் மற்றும் 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்கள், (ரயில் நிலையம்), கோயில்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

முகாம் நாட்களில் பயணிக்கும் குழந்தைகளுக்காக பேருந்து நிலையம், ரயில் நிலையம், சுங்கச்சாவடி மற்றும் கோவில்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.   இம்மையங்கள் அதிகாலை முதல் இரவு வரை  செயல்படும்.

தொலைதூர பகுதிவாழ் குழந்தைகளுக்கும் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகளுக்கும் நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

உபயோகப்படுத்தப்படும் போலியோ தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் இடத்திலிருந்து குழந்தையை சென்று அடையும் வரை தடுப்பு மருந்தின் வீரியம் குறையாமல் குளிர் பதன தொடர் மூலம் சுகாதாரத்துறையினர் பாதுகாக்க வேண்டும்.

28.01.2018 அன்று பிறந்த குழந்தைகளுக்கும், இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும், இந்த முகாமில் கூடுதல் தவணையாக கட்டாயம் சொட்டு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த தடுப்புமருந்து அரசின் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும்.

போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் “இரண்டு சொட்டு” போலியோ சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும். பொது மக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன்,  ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், நகர்நல அலுவலர் நமாச்சிவாயம், மருத்துவக்கல்லூரி முன்னாள் டாக்டர் சிங்காரவேல் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...