Pages

Thursday, January 11, 2018

தஞ்சையில் ஜன.24, 25ல் இலவச ஆன்-லைன் வர்த்தக பயிற்சி!

அமேசான் ஈ-காமர்ஸ் ஸ்பெஷலிஸ்ட்
(Amazon Trained E-Commerce Specialist)
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், (தமிழ்நாடு அரசின் தன்னாட்சி நிறுவனம்) 2001 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நிறுவப்பட்டது. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழிற்பேட்டை சங்கங்கள் மூலமாகவும், தொழில் வல்லுநர்கள் மூலமாகவும் தொடர்ந்து தொழில் முனைவோருக்கும் / தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ளவர்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் அமேசான் ஈ-காமர்ஸ் ஸ்பெஷலிஸ்ட் (Amazon Trained E-Commerce Specialist) என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் சென்னையில் (4 மற்றும் 5 ஜனவரி 2018) மதுரை (22 மற்றும் 23 ஜனவரி 2018) மற்றும் தஞ்சாவூரில் (24 மற்றும் 25 ஜனவரி 2018) ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியானது Yes Bank மற்றும் EDII Inida, Ahmadabad துணையோடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி இந்தியாவில் இளைஞர்களின் தொழில் நுட்ப திறனை மதித்து அவர்களின் வேலை வாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அமேசான் நிறுவனம் இப்பயிற்சியினை 40 - 45 தொழில் முனைவோர்கள் (ஆலோசகர்கள் / காப்பீட்டு முகவர்கள் / இல்லத்தரசிகள்) ஆகியோர்களை மையமாக கொண்டு நடத்தப்படவுள்ளது. இந்த பயிற்சியானது ஆன்லைன் வர்த்தகத்தின் பல்வேறு அம்சங்களான தயாரிப்பு பட்டியலை உருவாக்குதல், விலை நிர்ணயம், கணக்கு மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை கொண்டு சில்லறை விற்பனையாளர்கள் தங்களுக்கான டிஜிட்டல் அட்டவணையை உருவாக்கி நிர்வகித்தல் போன்ற பயிற்சிகளை வழங்க உள்ளது.

இது ஒரு இலவச பயிற்சி இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஒரு பட்டயப் படிப்பு அதனுடன் கணிப்பொறி திறன்களை அறிந்தவராக இருத்தல் வேண்டும். பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற விரும்புவோர் தங்களது முழு விவரத்தை

www.editn.in என்ற இணையதளத்தில் உள்ள Google Form படிவத்தின் மூலம் வரும் 30 டிசம்பர் 2017 தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு தேர்வு ஆனவர்கள் குறித்த விவரம் அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய நபர் திரு.சு.தினேஷ் குருதேவ், தொலைபேசி எண்: 8668103217.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...