Pages

Wednesday, January 10, 2018

சவுதியில் சிவப்பு விளக்கு சிக்னலில் நிற்காமல் சென்ற சைக்கிளுக்கு 3,000 ரியால் அபராதம் விதிப்பு!

அதிரை நியூஸ்: ஜன.10
சவுதி, ரியாத்தில் சிவப்பு விளக்கு சிக்னலில் நிற்காமல் சென்ற சைக்கிளுக்கு 3,000 ரியால் அபராதம் விதிப்பு

சவுதி அரேபியா தலைநகர் ரியாத் மாநகரின் அல் ராஸ் பகுதியில் சிவப்பு விளக்கு சிக்னலுக்கு நிற்காமல் சென்ற சைக்கிள் ஓட்டிக்கு 3,000 ரியால் அபராதம் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன.

அபராதம் விதிக்கப்பட்டதை போலீஸார் ஊர்ஜிதம் செய்துள்ள அதேவேளையில் பல நாடுகளில் சாலையின் குறுக்கே பாதசாரிகள் நடந்த செல்வதற்குக் கூட அபராதம் விதிக்கப்படுவதாக கூறி தங்களின் செயலுக்கு நியாயம் கற்பித்துள்ளனர். மேலும் சிவப்பு விளக்கு சிக்னலில் நிற்காமல் செல்லும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது சைக்கிளா? காரா? ஏன பாகுப்படுத்தத் தேவையில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.

சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால்; 200 ரியால் பெறுமானமுள்ள சைக்கிளுக்கு 3,000 ரியால் அபராதம் என்பது சைக்கிள் ஓட்டியினுடைய 3 மாத சம்பளமாக இருக்கக்கூடும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனமுத்தா இதுவும் போச்சா!

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...