Pages

Thursday, January 4, 2018

சவுதியில் சட்ட விரோதமாக தங்கி இருந்த 337,281 வெளிநாட்டவர்கள் கைது!

அதிரை நியூஸ்: ஜன.04
சவுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 337,281 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சவுதியில் கடந்த வருட மார்ச் மாதத்துடன் முடிவடைந்த பொது மன்னிப்பை தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி 2 வரை சவுதியில் முறையான விசா மற்றும் தங்குமிட அனுமதியின்றி இருந்த வெளிநாட்டவர்கள் 337,281 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் மீது 15,000 முதல் 100,000 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது.

சட்ட விரோதமாக, எந்த ஆவணங்களும் இன்றி சவுதிக்குள் அத்துமீறி நுழைந்த 4,432 வெளிநாட்டவர்களில் 75 சதவிகிதம் பேர் ஏமன் நாட்டவர்களும் (உள்நாட்டுப் போர் காரணமாக இருக்கலாம்), 23 சதவிகிதம் எத்தியோப்பிய நாட்டவர்களும், மீதமுள்ள 2 சதவிகிதமே பிற நாட்டவர்கள் என்ற தகவலும் கூடுதலாக வெளியாகியுள்ளது.

நவம்பர் 15 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை அத்துமீறி நுழைந்து பிடிபட்ட சுமார் 4,140 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 178 பேர் நாட்டை விட்டு சட்ட விரோதமாக தப்பிச் செல்லும் போது பிடிபட்டுள்ளனர்.

ஏமனுக்கும் சவுதி உள்ளிட்ட பிற அரபு நாடுகளையும் பிரிக்கும் எல்லையாக சுமார் 1,800 கி.மீ தூரத்திற்கு கடினமான மலைத்தொடர்கள் உள்ளன. இந்த மலைத் தொடருக்கு பணக்கார அரபு நாடுகளிடமிருந்து ஏழை அரபு நாடுகளை பிரிக்கும் சுவர் என்ற பட்டப் பெயரும் உள்ளது. இந்த கடினமான மலைகளையும் ஏமனியர்கள் பெருமளவில் கடந்து வருகிறார்கள் என்றால் அவர்கள் நாட்டில் நிலவும் வறுமையை மனக்கண்ணாலேயே அளந்து விடலாம்.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...