Pages

Thursday, January 18, 2018

எம்எல்ஏக்கள் முன்னிலையில் 38 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கல்!

பட்டுக்கோட்டை, ஜன.18
பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மடத்திக்காடு கிராமத்தை சேர்ந்த 38 பேருக்கு எம்எல்ஏக்கள் முன்னிலையில் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினர். முன்னதாக பட்டுக்கோட்டை வட்டாட்சியர் எஸ்.கே.ரகுராமன் அனைவரையும் வரவேற்றார். இதில் வருவாய்துறையினர் மற்றும் மடத்திக்காடு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பேராவூரணியை அடுத்த திருச்சிற்றம்பலம் அருகே உள்ள மடத்திக்காடு கிராமத்தில் பல வருடங்களாக குடியிருந்து வரும் 38 குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு அரசின் சார்பில் மனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் கிராம கணக்கில் பதிவு செய்யப்படவில்லை எனக்கூறி, அதிகாரிகளால் பட்டா வழங்கப்படவில்லை. 11 வருடங்களாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், பல போராட்டங்களை நடத்தியும் வந்த பொதுமக்கள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசுவிடம் நேரில் முறையிட்டனர்.

இதையடுத்து பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த வீட்டு மனைப்பட்டா கடந்த 13 ந்தேதி அன்று வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...