Pages

Sunday, January 7, 2018

தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடந்த முகாமில் 40 யூனிட் இரத்தம் தானம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.07
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் மற்றும் தஞ்சாவூர் காளி இரத்த வங்கி இணைந்து நடத்திய இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை சங்க வளாகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு, தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத் தலைவர் சபீர் அகமது தலைமை வகித்தார். இளைஞர் சங்க நிர்வாகிகள் ஹாஜி முகமது, அஸ்லம், சகீர் அகமது, அப்துல் சலாம், அஃப்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தாஜூல் இஸ்லாம் சங்கத் தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், செயலாளர் ம.செ ஜபருல்லா ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

முகாமில், தஞ்சாவூர் காளி இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் ஐ. சண்முக சுந்தரம் தலைமையில் மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு குருதிக் கொடையாளர்களிடமிருந்து இரத்தத்தை தானமாகப் பெற்றனர்.

முகாமில், அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.எச் அஸ்லம், சங்க உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இரத்த கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து 40 யூனிட் இரத்தம் தானமாகப் பெறப்பட்டது.  முகாம் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 4 மணி வரை நடந்தது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...