Pages

Thursday, January 18, 2018

400 கிராம் எடையில் பிறந்து போராடிப் பிழைத்த அதிசயக் குழந்தை (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜன.18
இந்தியா, ராஜஸ்தான் மாநிலத்தின் உதைப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் 48 வயது சீதாவிற்கும் 50 வயது கிரிராஜூவிற்கும் 28 வார குறை பிரசவத்தில் பிறந்தாள் கடந்த ஜூன் 15 ஆம் தேதி பிறந்தாள் மனுஷி (Manushi) என்கிற பெண் குழந்தை. மனுஷி பிறக்கும் போது சுமார் 400 கிராம் எடை மட்டுமே. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிற்குப் பின் சுமார் 6 மாதங்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில் தற்போது சுமார் 2.4 கிலோ எடையுடன் வீடு திரும்பியுள்ளாள் இந்த அதிசயக் குழந்தை.

பிறக்கும் போது 8.6 அங்குலம் மட்டுமே இவளது மொத்த வளர்ச்சி அதாவது ஒரு கேட்பரீஸ் சக்லெட் சைஸ் அளவே. அவளது கால் பாதம் அவளது தந்தையின் கைப்பெருவிரல் நகத்தை விட சற்றே பெரிதான அளவே இருந்துள்ளது. மனுஷியின் தந்தை கிரிராஜ் வர்ணித்துள்ளது போல் அவள் போராடினாள், போராடினாள், போராடினாள் இறுதியாக அனைத்து தடைகளையும் உடைத்து வெற்றி பெற்றாள் என தன் மகள் உயிர் பிழைத்த நிலையை வர்ணித்துள்ளார்.

28 வார கருவாக இருந்தபோது அவளது தாய் உயர் ரத்த அழுத்தம் ஏற்படவே உடனடியாக சிசேரியன் மூலம் பிறக்க வைக்கப்பட்டாள் மனுஷி, வளர்ச்சியற்ற நுரையீரலால் பிறக்கும் போதே சுவாசிக்க முடியாமல் தவித்ததால் மேம்படுத்தப்பட்ட ரெஸ்பிரேட்டரி கருவியில் வைத்துக் பாதுகாக்கப்பட்டாள். அவளது குடல் வளர்ச்சி இன்றி இருந்ததால் 7 வாரங்கள் கழித்தே பால் குடிக்க முடிந்துள்ளது. அவளது இதயம், மூளை, கிட்னி, தோல், சிறுநீரக சுரப்பிகள் யாவும் வளர்ச்சியற்றே இருந்துள்ளன.

சுமார் 10 லட்சம் ரூபாய் மருத்துவ செலவில் 6 மாதம் தொடர் மருத்துவம் பார்க்கப்பட்டு அதிசயமாக உயிர் பிழைத்துள்ள மனுஷியை ஒர் தேவதை என கொண்டாடுகின்றனர் அவரது பெற்றோரும் மருத்துவர்களும் எனினும் பெற்றோர்களின் ஏழ்மைநிலையை கருதி 10 லட்சத்திற்கு பதில் மிகச் சொற்பமான தொகையையே பெற்றுள்ளனர் மருத்துவமனை நிர்வாகத்தினர். இதுபோன்ற மிகவும் எடை குறைந்த குறை பிரவச குழந்தைகள் உயிர் பிழைப்பது அரிதினும் அரிதாம். தற்போது மனுஷியின் உடல் பாகங்கள் சீராக வளர்ச்சி பெற்றுவருகின்றன.

மனுஷி, 28 வாரத்தில் 400 கிராம் எடையில் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதன் மூலம் இந்தியா மற்றும் தெற்கு ஆசியா பிராந்தியத்திலேயே உயிர் பிழைத்துள்ள முதலாவது அதிசயக் குழந்தை என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளாள். இதற்கு முன் பஞ்சாப் மாநிலம் மோஹாலியில் (சண்டிகர்) 2012 ஆம் ஆண்டு 450 கிராம் எடையில் பிறந்த ரஜ்னி என்ற குழந்தையே இந்தியா அளவில் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.

Sources: Khaleej Times / Deccan Herald / Metro / The Hindu
தமிழில்: நம்ம ஊரான்
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...