Pages

Thursday, January 11, 2018

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் 499 வீடுகள் கட்டுவதற்கு ஒதுக்கீடு!

அதிராம்பட்டினம், ஜன.11
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் 499 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டில் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஏழை, நடுத்தர வகுப்பை சேர்ந்த மக்கள் இந்த திட்டத்தின் முக்கிய பயனாளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ், 2016-17 நிதி ஆண்டில், அதிராம்பட்டினம் பேருராட்சியில் 499 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் விவரங்களை திருச்சி மண்டல பேரூராட்சிகள் செயற்பொறியாளர் ஏ. முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். இதில், அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...