Pages

Wednesday, January 3, 2018

துபை விமான நிலையம் அல் ராஷிதியா மேம்பாலம் வரும் ஜன.5ல் திறப்பு!

அதிரை நியூஸ்: ஜன.03
துபையில் நடைபெற்று வரும் பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றான 6 லேன் இருவழிப்பாதை கொண்ட அல் ராஷிதியா இன்டர்சேஞ்ச் மேம்பாலம் வரும் வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படுகின்றது. இதன் மூலம் முஹமது பின் ராஷித் இன்டர்சேஞ்ச் மற்றும் காஸபிளன்கா இன்டெர்சேஞ்சிற்கு இடைப்பட்ட தூரத்தை இனி 30 நிமிடங்களுக்கு பதிலாக 5 நிமிடங்களில் கடக்கலாம்.

சுமார் 404 மில்லியன் திர்ஹம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தொடர் சாலை மேம்பாட்டு பணிகள் வழியாக எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் சுமார் 92 மில்லியன் வாகனங்கள் துபை விமான நிலையம் செல்லும் இப்பாதையை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிக்கு சுமார் 5,000 கூடுதல் வாகனங்கள் இம்மேம்பாலத்தில் பயணிக்கும் தேரா மற்றும் கவானீஜ் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் உட்பட. இந்த 6 லேன் ராஷிதியா மேம்பாலம் திறக்கப்படுவதன் வழியாக இன்டெர்சேஞ்ச்களில் காத்திருக்கும் நேரம் 13 நிமிடங்களிலிருந்து 1 நிமிடமாக குறைகிறது.

மேலும் கட்டுமானத்தின் இறுதிகட்ட பணிகளில் உள்ள காஸபிளன்கா மேம்பாலம் இம்மாத மத்தியில் திறக்கப்படுவதுடன் இப்பாலத்திலிருந்து ஒருவழிப்பாதை துணை மேம்பாலம் ஒன்றும் கூடுதலாக கட்டப்பட்டு வருகிறபடியால் இனி சிக்னல்களில் காத்திருக்கத் தேவை இருக்காது என துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...