Pages

Wednesday, January 3, 2018

தஞ்சை மாவட்டத்தில் மீன் குட்டை அமைக்க 50 % மானியம் ~ விண்ணப்பிக்க அழைப்பு !

கோப்பு படம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் புதிய பண்ணைக் குட்டை அமைத்து மீன் வளர்க்க 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும்.  பயன் பெற விரும்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் நோக்கமானது, உள்நாட்டு மீன்வளர்ப்பை ஊக்கப்படுத்தவும், அவர்களின் வருமானத்தை பெருக்கவும், மீன் உற்பத்தியினை அதிகப்படுத்திடவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும், வேளாண் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பை உறுதிப் படுத்திடவும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின்படி, 50மீ ஓ 50மீ ஓ 1.5மீ அளவில் 2500 சதுர மீட்டர் பரப்பளவில் பண்ணைக் குட்டையினை ரூ.80000 செலவில் அமைப்பதற்கும், இப்பண்ணைக்குட்டையில் மரபணு மேம்படுத்தப்பட்ட பண்ணைகுட்டை திலேப்பியா மீன்குஞ்சுகளை 5000 எண்ணிக்கையில் இருப்பு செய்திட ஒரு மீன்குஞ்சு ரூ.2/- விலையில் ரூ.10000/- மதிப்பில் வாங்கிடவும், மீன்தீவனம்  கிலோ ரூ.35/- விலையில்  1100 கிலோவினை ரூ.38,500 மதிப்பில் வாங்கிட ஆகும் செலவினத் தொகையில் 50 சதவீதம் மானியமாக வழங்கிட அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி, மீன்குளம் அமைப்பதற்கு ரூ.40000/-மும் மீன்குஞ்சுகள் வாங்கிட ரூ.5000/-மும் மீன் தீவனம் வாங்கிட ரூ.19,250/-மும்  ஆக கூடுதல் ரூ.64250/- மானியம்  பயனாளிக்கு வழங்கப்படும். 

எனவே மேற்படி திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் எண்.834/4, கீழவாசல், அண்ணாசாலை, தஞ்சாவூர் (தொலைபேசி எண்.04362-235389) எனும் முகவரியில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் அதிகம் பெறப்படின் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் மானியத்திற்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...