Pages

Wednesday, January 10, 2018

ஹஜ் கோட்டாவில் 5,000 பேருக்கு கூடுதல் அனுமதி !

அதிரை நியூஸ்: ஜன.10
இந்த வருட ஹஜ் கோட்டாவில் 5,000 பேருக்கு கூடுதல் அனுமதி.

வருடாந்திர புனித ஹஜ் யாத்திரைக்காக உலககெங்கிலுமிருந்து சுமார் 20 லட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லீம்கள் புனித மக்கா நகரை நோக்கி வருவர். இந்த புனித ஹஜ் யாத்ரீகர்கள் நாட்டுக்கு எத்தனை பேர் வர வேண்டும், அவர்களுக்கான வசதிகள் என்னென்ன செய்யப்பட வேண்டும் என அனைத்தையும் முடிவு செய்வது சவுதி அரசின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம். இவர்களே எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை பேர் அனுமதி என்ற கோட்டாவையும் வருடந்தோறும் பரிசீலணை செய்து மாற்றியமைத்து வருகின்றனர்.

சில வருடங்களாக புனிதப் பள்ளியின் விரிவாக்கப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் அனைத்து நாடுகளுக்கும் கோட்டா எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தது. இந்த கோட்டாவில் கடந்த வருடம் மாற்றம் செய்யப்பட்டதன் வழியாக சுமார் 35,000 இந்தியர்கள் கூடுதலாக ஹஜ் செய்யக்கூடிய  வாய்ப்புகள் ஏற்பட்டன. எதிர்வரும் ஹஜ் யாத்திரைக்கு மேலும் கூடுதலாக 5,000 பேர் செல்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் நக்வி தெரிவித்துள்ளார் இதன் மூலம் இந்த வருட ஹஜ்ஜிற்கு இந்தியாவிலிருந்து சுமார் 1,75,025 பேர் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு வருடங்களில் மொத்தம் 40,000 பேர் கூடுதலாக செல்ல அனுமதி கிடைத்துள்ளது சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன் கப்பல்கள் மூலம் ஹஜ் யாத்ரீகர்களை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இருநாட்டு அதிகாரிகளும் பரிசீலித்து விரைவில் முடிவுக்கு வருவர் என்றும் இந்த வருடம் அல்லது எதிர்வரும் வருடங்களில் கப்பலில் ஹஜ்ஜிற்கு செல்வது சாத்தியமாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வருட ஹஜ்ஜிற்காக சுமார் 355,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...