Pages

Saturday, January 6, 2018

தஞ்சை மாவட்டத்தில் 6.09 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு!

தஞ்சாவூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு  வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 6,09,288 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் காவேரி கூட்டுறவு சிறப்பங்காடியில் கூட்டுறவு துறை  சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இன்று (06.01.2018) வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனார்.

வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு பொங்கல் பரிசு தொகுப்பு  மற்றும் வேட்டி, சேலைகளை வழங்கி பேசியதாவது; 
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி பெறும் குடும்ப அட்டைகள், ஏஏஒய் குடும்ப அட்டை, வன அட்டை, இலங்கை தமிழர் அட்டை மற்றும் காவலர் குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி 20 கிராம், திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் 2 அடி நீளமுள்ள கரும்பு துண்டு ஒன்று ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் 1172 நியாய விலைக் கடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் 11 மகளிர் கடைகள் மூலம் 6,09,288 குடும்ப அட்டைதாரர்கள் இப்பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று பயனடைவார்கள். பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தமிழக அரசால் ரூ.2.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் வசிக்கும் விவசாய தொழிலாளர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தினருக்கு தலா 1 செட் வேட்டி, சேலை வழங்கிட முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து அம்மா அவர்களின் ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா அவர்கள் வழியில் வந்த தமிழக அரசின் முதல்வர் அவர்கள் இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு தொகுப்பு பை மற்றும் வேட்டி சேலை வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். 05.01.2018 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்கள். 

இதனை தொடர்ந்து இன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 2018ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 5,55,910 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் விலையில்லா வேட்டி சேலை பயன் பெறும் வகையில் நியாய விலை கடைகளில் மூலம் வழங்கப்படவுள்ளது. பொது மக்கள் நெரிசலின்றி பெற்று செல்லும் வகையில் தெருக்கள் அல்லது பகுதி வாரியாக வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது;
விவசாயத்திற்கு பயன்படுகின்ற கால்நடைகளை சிறப்பிக்கவும்,  அறுவடை செய்யும் பொருட்களை கொண்டு, தை திருநாள் அன்று உழவர்களால் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டு வருகின்றது. உழவே அச்சாணி என்று திருவள்ளுவர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். உழவுக்குரிய மரியாதையும் உழவு தொழில் செய்கின்ற விவசாயிகளுக்கு உழவுக்குகேற்ற ஊதியம் கிடைக்க வழி வகை செய்கின்ற தொழிலே உழவு தொழிலாகும்.  உழவு தொழில் மிகவும் உன்னதமான தொழிலாகும். விவசாயம் என்றென்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அ.ராஜகோபாலன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மொ.ஏகாம்பரம், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் மற்றும் சதய விழா குழு தலைவர் துரை.திருஞானம், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் எம்.உமாமகேஸ்வரி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வி.பண்டரிநாதன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் இராம. இராமநாதன், ராம்குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்  அமுதாராணி ரவிச்சந்திரன், நிலவள வங்கித் தலைவர் துரை.வீரணன், நிக்சல்சன் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, நிக்கல்சன் கூட்டுறவு வங்கி இயக்குநர் சரவணன், கல்வி புரவலர் ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி, சமூகநலத்துறை துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், கூட்டுறவு துறை துணைப் பதிவாளர்கள் மற்றும் அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...