Pages

Wednesday, January 17, 2018

8 பேன்ட்,10 சர்ட் அணிந்து வந்த பயணியை விமானத்தில் ஏற்ற மறுப்பு!

அதிரை நியூஸ்: ஜன.17
அதிக உடைகள் அணிந்திருந்ததால் விமானத்தில் ஏற்ற மறுக்கப்பட்ட பயணி

நம்முடைய லக்கேஜ் அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக இருந்தால் என்ன செய்வோம்? அப்படித்தாங்க ரியான் ஹவாய் என அழைக்கப்படும் ஒருத்தர் ஐஸ்லாந்து நாட்டிலிருந்து இங்கிலாந்து வர பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார் ஆனால் லக்கேஜ் கொஞ்சம் கூடுதலாக போய்விட்டது ஆனா மனுசன் சடைக்கல.

8 பேன்ட்டுகள், 10 சட்டைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அணிந்து கொண்டு போனாரா! விமான நிறுவன அதிகாரிகள் தங்களை ஏமாற்ற முயன்றதாக கூறி அவரை பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என கூறிவிட்டனர், சத்தம் போட்டு பார்த்தாரு ஆனாலும் முடியல. விமான நிலைய போலீஸார் வேறு புடிச்சி 1 நாள் உள்ள வச்சுட்டாங்க! அவரது செக்டு லக்கேஜ்கள் மட்டும் பத்திரமா பறந்து லண்டனுக்கு வந்திருச்சுங்க.

அடுத்த நாள் ஈஸிஜெட் என்ற விமானத்தில் பயணம் செய்ய வேறொரு டிக்கெட் எடுத்துக் கொண்டு ஒழுங்காத்தாங்க போனாரு ஆனாலும் அவரை பயணம் செய்ய அனுமதிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க! காரணம்? நேற்று பிரிட்டீஷ் ஏர்வேஸ் ஊழியர்களுடன் சண்டை போட்டியே அதுக்காகன்னு சொன்னாங்க!

பாவம் அந்த மனுசன்ட்ட கையில இருந்த காசும் தீர்ந்து போச்சு, 10 சட்டை போட்ட மனுசனுக்கு இப்போ போட மாற்று உடுப்பும் கையில் இல்லை. பின்னே 2 டிக்கெட் எடுத்தும் பறக்க முடியாம போனா!

ஒருவழியா மூணாவது நாள் நார்வேஜியன் ஏர்லைன்ஸில் டிக்கெட் எடுத்துக்கிட்டு பத்திரமா வந்து சேர்ந்துட்டாருங்க. அப்புறம் அந்த 2 விமான நிறுவனங்களுடனும் சண்டை போட்டு விட்ட காச வாங்கிட்டாருங்கலாம். இது இனவெறின்னு சம்பவத்தை டிவிட்டர்லயும் தட்டிட்டாருங்க.

Source: Fox News / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...