Pages

Thursday, January 18, 2018

உடலுக்கு வலுவூட்டும் பாயாசம் ~ அதிராம்பட்டினத்தில் 9 ஆம் ஆண்டை நோக்கி...

அதிராம்பட்டினம், ஜன.18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.எஸ் சாகுல் ஹமீது (வயது 56). பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை அருகே 'ஜம் ஜம்' சிறுதானிய பாயாசம் (கஞ்சி) விற்பனை நிலையத்தை கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறார். உடலுக்கு வலுவூட்டம் பாயாச வகைகளை தினமும் ஏராளமானோர் விரும்பி பருகுகின்றனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் எம்.எஸ் சாகுல் ஹமீது கூறியது;
அதிராம்பட்டினத்தில் கடந்த 9 ஆண்டுகளாக சிறுதானிய பாயசம் விற்பனை செய்து வருகிறேன். பிரதி வாரம் தோறும், ஞாயிற்றுக்கிழமை கோதுமை, திங்கட்கிழமை பச்சைபயிறு, செவ்வாய்க்கிழமை கோதுமை, புதன்கிழமை ப்ரூட் மிக்சர், வியாழக்கிழமை அவல், வெள்ளிக்கிழமை சாலியா, சனிக்கிழமை பச்சை பயிறு, கோதுமை ஆகிய தானியங்களை கொண்டு  பாயாச வகைகளை ருசியாகத் தயார் செய்து சுடச்சுட விற்பனை செய்து வருகிறேன். டீ கிளாஸ் அளவில் ரூ.7. அதிகாலை தொடங்கி காலை 7.30 மணி வரை 20 லிட்டர் பாயாசம் விற்பனை ஆகிறது. தினமும் 200 பேர் வரை வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதில், சிலர் வீட்டிற்கும் பிளாஸ்கில் வாங்கிச் செல்கின்றனர். உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக உள்ளதால், பல வாடிக்கையாளர்கள் காலையில் தேநீர் அருந்துவதை நிறுத்திவிட்டு இவற்றை விரும்பி பருகுகின்றனர்' என்றார்.

செய்தி மற்றும் படம்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...