Pages

Monday, January 8, 2018

அதிராம்பட்டினத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் (படங்கள்)

செக்கடி மேடு பகுதி ரேஷன் கடையில் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்
அதிராம்பட்டினம், ஜன.08
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில், அரிசி பெறும் குடும்ப அட்டைகள், ஏஏஒய் குடும்ப அட்டை, வன அட்டை, இலங்கை தமிழர் அட்டை மற்றும் காவலர் குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முந்திரி 20 கிராம், திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் மற்றும் 2 அடி நீளமுள்ள கரும்பு துண்டு ஒன்று ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி, அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள 11 ரேஷன் கடைகளின் குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்தந்த பகுதிகளின் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று திங்கட்கிழமை காலை விநியோகிக்கப்பட்டது.
மரைக்கா பள்ளி ரேஷன் கடையில் அதிமுக வார்டு செயலாளர்கள் ஹாஜா பகுருதீன், முகமது முகைதீன், அபுதாஹிர் ஆகியோர் தொடங்கி வைத்தபோது எடுத்தப் படம் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...