Pages

Thursday, January 4, 2018

அமீரகத்தில் சில நகைக்கடைகளில் வாட் வரி இல்லாமல் நகை விற்பனை!

அதிரை நியூஸ்: ஜன.04
அமீரகத்தின் ஒரு சில நகைக்கடைகளில் வாட் வரி இல்லாமல் நகை விற்கப்படுகிறது.

அமீரகத்திலும், சவுதியிலும் 2018 ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் வாட் வரி அமுல்படுத்தப்பட்டுள்ளதால் இவற்றை செலுத்தும் அனைத்து பொதுமக்கள் மீதும் நேரடியாகவே கூடுதல் சுமை ஏற்றப்பட்டுள்ளது என்றே அர்த்தம். அதிலும் தங்க நகைகளின் மீது ஒவ்வொரு கிராமிற்கும் 7 முதல் 8 திர்ஹம் வரை வாட் வரி வசூலிக்கப்படுகின்றது.

இந்த வாட் வரியையே விளம்பர யுக்தியின் ஒரு வடிவமாக பயன்படுத்திக் கொண்டுள்ளன துபை கோல்டு அண்ட் ஜூவல்லரி குழுமத்தில் அங்கத்தினர்களாக (Dubai Gold & Jewellers Group Members) உள்ள சில சில்லறை நகை விற்பனை நிறுவனங்கள். இந்தக் குழுமத்தில் சுமார் 500 நகைக்கடை வியாபாரிகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், இவர்களில் ஏராளமானோர் ஏற்கனவே வாட் வரி வசூலித்து வருகின்றனர் என்றபோதும் விரல் விட்டு எண்ணத்தக்க அளவிலான சில நகைக்கடைகள் மட்டும் வாட் வரியை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிப்பதை இந்த 2018 ஜனவரி மாத இறுதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. (நம்முடைய வாட் வரியை அவர்களே கட்டிவிடக்கூடும்)

வாட் வரியை இந்த மாத இறுதி வரை தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்துள்ள நிறுவனங்களில் ஒன்று 'ப்யூர் கோல்டு ஜூவல்லர்ஸ்' (Pure Gold Jewellers) என்ற நிறுவனமும் ஒன்றாகும். இவர்களிடம் வாங்கும் தங்க, வைர நகைகள் மீது வாட் வரி இல்லை என அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு அமீரகம் முழுவதும் கிளைகள் உள்ளன.

குறிப்பு: 
பொதுவாக, செய்கூலி சேதாரம் என சுரண்டும் நகைக்கடைக்காரர்கள் அவ்வளவு நல்லவர்களா? என்ற கேள்விக்கு எங்களிடம் விடையில்லை. இது பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி அவ்வளவே, நகைகளை உரசி வாங்குவது போல் வாங்குமுன் உண்மைத்தன்மையையும் உரசி ஆராய்ந்து வாங்குவதும் உங்கள் கடமையே.

உலக தங்க கவுன்சிலின் (World Gold Council) 2016 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரங்களின்படி, உலகிலேயே அமீரகவாசிகள் தான் (உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் கலந்த) மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப சராசரியாக தலைக்கு 5 கிராம் தங்கம் வாங்கியுள்ளனர். இவர்களுக்கு அடுத்து குவைத்வாசிகள் 3.1 கிராமும், சவுதிவாசிகள் 1.9 கிராமும், எகிப்தியர் 0.3 கிராமும் வாங்கியுள்ளனர்.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...