Pages

Tuesday, January 9, 2018

அமீரகத்திற்கு வேலைவாய்ப்பு விசாவில் வருபவர்களின் கனிவான கவனத்திற்கு!

அதிரை நியூஸ்: ஜன.09
பிப்ரவரி 4 முதல் அமீரகத்திற்கு வேலைவாய்ப்பு விசாவில் வருபவர்களுக்கு நன்னடத்தை நற்சான்றிதழ் கட்டாயம் வேண்டும்

அமீரகத்திற்கு வேலைவாய்ப்பு விசாவில் (UAE Work permit visa) வருபவர்கள் எதிர்வரும் 2018 பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் சான்றழிக்கப்பட்ட (Attested)  நன்னடத்தை நற்சான்றிதழை (Good conduct certificate) விசா விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சொந்த நாட்டில் அல்லது பிற வெளிநாட்டில் 5 வருடங்கள் வாழ்ந்திருந்தால் அந்தந்த நாடுகளிலிருந்து நன்னடத்தை நற்சான்றிதழை பெற்று (a certificate of good conduct — issued by either by his home country or the country where he lived for five years) அவற்றை அந்தந்த நாடுகளில் செயல்படும் அமீரக தூதரகங்கள் அல்லது அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச நல்லுறவுகளுக்கான அமைச்சகத்தின் சார்பில் வெளிநாடுகளில் செயல்படும் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர் எனும் வாடிக்கையாளர் சேவை மையங்களில் கொடுத்து சான்று பெற்று வேலைவாய்ப்பு விசாவுக்கான விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். (The certificate must then be attested by UAE diplomatic missions, or oversees Customer Happiness Centres at the Ministry of Foreign Affairs and International Cooperation)

இந்த நன்னடத்தை சான்றிதழ் வேலைவாய்ப்பு விசாவில் வருபவர்களுக்கு மட்டுமே அன்றி அவர்களது ஸ்பான்சரின் கீழ் வரும் குடும்ப உறவுகளுக்கு தேவையில்லை.(The certificate will only be applicable for the worker concerned and not his/her dependents. Those coming to the country on visit or tourist visas needn't get the certificate either)

இந்த புதிய நடைமுறை விசிட் விசா மற்றும் டூரிஸ்ட் விசாவில் அமீரகத்திற்குள் வருபவர்களுக்கு பொருந்தாது (The committee clarified that the certificate is not required from those who come to the country on a visit or tourist visa) எனவும் விளக்கமளித்துள்ளது அமீரக ஒருங்கிணைப்பு கமிட்டி  (The UAE Coordination Committee) எனும் உயர்மட்ட அரசமைப்பு.

Sources: Gulf News & Khaleej Times
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...