Pages

Wednesday, January 24, 2018

தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று (24.01.2018) புதன்கிழமை கொண்டாடும் வகையில் கும்பகோணத்தில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் நலன் காக்கவும், அவர்களுக்கு ஏற்படும் வன் கொடுமைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 24ம் தேதி தேசிய பெண் குழந்தை பெண் தினமாக அறிவிக்கப்பட்டு பொது மக்கள் மற்றும் பெண் குழந்தைகளிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இன்று கும்பகோணத்தில் சுமார் ஆயிரத்திற்கும்; மேற்பட்ட கல்லூரி மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி மகாமகம் குளத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக காந்தி பூங்காவில் நிறைவடைந்தது.  இப்பேரணியில் அரசினர் மகளிர் கல்லூரி இதயா மகளிர் கல்லூரி, அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரி சேர்ந்த 1000க்கு மேற்பட்ட மாணவிகளை பேரணியில் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் பெண்களின் உணர்வுகளை மதிப்போம், பெண்மையை போற்றுவோம், பெண் சிசு கொலையை தடுப்போம், குழந்தை திருமணத்தை தடுப்போம், பெண் குழந்தைகளின் நலனை பாதுகாப்போம், பாலின பாகுபாடு பார்க்க மாட்டோம், பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்போம், பள்ளி வயதில் பள்ளிக்கு அனுப்புவோம், வேலைக்கு அனுப்ப மாட்டோம், பள்ளி பருவத்தில் பள்ளிகளுக்கு படையெடுப்போம்  போன்ற பதாகைகள் ஏந்தியவாறு கோஷமிட்டு மாணவிகள் பேரணியாக சென்றன. 

இப்பேரணியானது மகாமகம் குளம் மேல்கரை தொடங்கி, தலைமை அஞ்சலகம், உச்சி பிள்ளையார் கோவில், மத்திய கூட்டுறவு வங்கி வழியாக நகர மேல்நிலைப்பள்ளி, காந்தி பூங்காவில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி, வட்டாட்சியர் மாணிக்கராஜ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் இராம.இராமநாதன், சோழபுரம் அறிவழகன், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நடராஜன், மற்றும் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...