Pages

Saturday, January 13, 2018

அதிரையில் தார் சாலை அமைத்து தரக்கோரி எம்.எல்.ஏ சி.வி சேகரிடம் சம்சுல் இஸ்லாம் சங்கம் கோரிக்கை!

அதிராம்பட்டினம், ஜன.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இரு வேறு பகுதிகளில்  தார் சாலை அமைத்து தரக்கோரி சம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் எம்.எல்.ஏ சி.வி சேகரிடம்  கோரிக்கை மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவில் அமைந்துள்ள சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில், அதிரை சேர்மன் வாடி முதல், செக்கடிமேடு ஜம் ஜம் உணவகம் வழியாக மரைக்கா குளம் வரையிலான ஒரு பகுதியிலும், செக்கடிமேடு ஜம் ஜம் உணவகம் தொடங்கி நடுத்தெரு, ஜாவியா சாலை வழியாக கல்லூரி முக்கம் வரையிலான மற்றொரு பகுதி ஆகியவற்றில் புதிதாக தார் சாலை அமைத்து தரக் கோரி, சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் அபூபக்கர் மற்றும் சம்சுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை, அவரது அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது ,அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் உடன் இருந்தார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...