Pages

Friday, January 19, 2018

தஞ்சை மாவட்டத்தில் தொழுநோய் ஒழிப்பு இரு வார விழிப்புணர்வு முகாம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்  முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (19.01.2018) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய தொழு நோய் ஒழிப்பு பொது மக்களிடையே  விழிப்புணர்வு உருவாக்க வேண்டும். தொழுநோய் இல்லாத உலகை உருவாக்க வேண்டும். தொழு நோய் விழிப்புணர்வு தொடர்பாக வருகிற 30.01.2018 முதல் 13.02.2018 வரை தொழு நோய் ஒழிப்பு இரு வார விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. 

தொழுநோயின் அறிகுறிகள் பொது மக்கள் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் துண்டு பிரசுரங்கள், கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழுநோயின் அறிகுறிகள் முதலில் உடல் பகுதியில் தேமல் போல் போன்று வட்டமாகவும், வெள்ளை நிறமாகவும் காணப்படும். இவ்வாறு தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனை சென்று உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.  மேலும், துணை இயக்குநர் தொழுநோய் மருத்துவர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொழுநோய் தொடர்பாக விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன், துணை இயக்குநர் தொழுநோய் டாக்டர் குணசீலன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், நகர்நல அலுவலர் நமாச்சிவாயம்,  மருத்துவக்கல்லூரி முன்னாள் டாக்டர் சிங்காரவேல் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...