Pages

Sunday, January 14, 2018

முன்னாள் இந்திய அரசர்களின் நகைகளை ஆட்டையை போட்ட திருடர்கள்!

அதிரை நியூஸ்: ஜன. 14
இத்தாலி நாட்டின் வெனீஸ் அரண்மனை ஒன்றில் காட்சிப்படுத்தி இருந்த
கத்தார் அமீருக்கு சொந்தமான முன்னாள் இந்திய அரசர்களின் நகைகளை ஆட்டையை போட்ட திருடர்கள்.

இந்தியாவை ஆண்ட பழங்கால அரசர்கள் பலவிதமான நகைகளையும், ஆடை ஆணிகலன்களையும் விரும்பி அணியக்கூடியவர்களாக இருந்துள்ளனர். இந்திய அரசர்களின் வித்தியாசமான நகைகளை சேகரித்து வைத்திருக்கும் கத்தார் நாட்டு ஆட்சியாளர் ஷேக் ஹமத் பின் அப்துல்லா அல் தானி அவர்கள் இவற்றை இத்தாலி நாட்டின் வெனீஸ் அரண்மனை ஒன்றில் காட்சிப்படுத்தி இருந்தார்.

முகலாய அரசர்கள் உட்பட பல இந்திய அரசர்கள் அணிந்த 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமார் 230 வகையான நகைகளை சேகரித்து வைத்துள்ளார் ஷேக் ஹமத் அல் தானி அவர்கள்.

இந்த நகைகளின் இரண்டை குறைந்தது 2 திருடர்கள் திருடியிருக்கலாம் என வெனீஸ் நகர போலீஸார் தெரிவித்துள்ளனர். திரைப்படங்களின் காட்டப்படுவதைப் போல் கூட்டமான நேரத்தில் உள்ளே வந்து, அபாய ஒலி எழுப்பும் கருவிகள் இவர்கள் திருடிச் சென்றபின் தாமதமாக ஓசை எழுப்புமாறு செய்து விட்டு திருடியுள்ளனர் இந்த பலே திருடர்கள்.

உடைகளில் குத்திக் கொள்ளும் அலங்கார ஊசி (Golden Brooch) ஒன்றும் இரண்டு காதனிகளுமே (Pair of Ear Rings) திருட்டுப் போன அணிகலன்களாகும். இந்த நகைகள் அனைத்தும் பாரீஸ், லண்டன், நியூ யார்க், ஜப்பானின் கீயூட்டோ என அடுத்தடுத்து காட்சிப்படுத்தப்பட இருந்தன.

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...