Pages

Saturday, January 20, 2018

காதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி (படங்கள்)

கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் பேசுகிறார்
அதிராம்பட்டினம், ஜன.20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எஸ்.ஜே அபுல் ஹசன் சிறப்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர் திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழக அரசியல் மற்றும் அறிவியல் துறை புலத் தலைவர் ஜி. பழனித்துரை கலந்துகொண்டு பேசியது;
முதல் தலைமுறை தியாகத் தலைமுறையை உருவாக்கிய பாரம்பரியக் கல்லூரி. இந்த நாடு முன்னேற வேண்டும், இந்த சமூகம் முன்னேற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதில் இக்கல்லூரி முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்கட்டாக இந்த கல்லூரி இருந்து வருகிறது. இங்கு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் தான் கல்லூரிக்கு ஆதாரம், சமூக பொருளாதாரம். மேலை நாடுகளில் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் எல்லாம் ஒன்றுக்கூட்டப்பட்டு பல்கலைக்கழகம் மேம்பட அங்கு திட்டம் வகுக்கப்படும். அதில், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குவார்கள். தங்களது பங்களிப்பை அளிப்பார்கள்.

இக்கல்லூரியின் நூலத்தில் உள்ள நூல்களை அதிகளவில் படித்தேன். படித்துக்கொண்டு இருந்தேன். எனக்கு அதிக ஆற்றலை தந்தது. எனது ஆசிரியர்கள் பாடங்கள் கற்றுத் தந்ததைவீட ஒழுக்கத்தையும், நல்ல பண்பையும் கற்றுத்தந்தனர். இவர்களால் தான் வாழ்வில் நான் உச்சத்தை தொட்டேன். இதுபோன்ற சந்திப்பு நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்த வேண்டும், அதில் சிறந்த கல்வியாளர்களை அழைத்து பேச வைக்க வேண்டும். கற்றுக்கொடுக்கும் ஆசிரியரிடமிருந்து மாற்றம் வர வேண்டும். ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும். சமுதாயக் கடப்பாடு மிக்க முழு மனிதனாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முழுவதும் மாறிய மாணவர்களாக கல்லூரியை விட்டுச் செல்ல வேண்டும்' என்றார்.

முன்னாள் மாணவர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ் பழனிமாணிக்கம் கலந்துகொண்டு பேசியது;
இக்கல்லூரியில் அமைந்துள்ள சூழல் போன்று வேறு எங்கும் அமைந்ததில்லை. மாணவர்கள் விருப்பங்களுக்கு மதிப்பளித்தது. அடுத்தக் கட்டத்திற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது இக்கல்லூரியின் சிறப்பு' என்றார்.

நிகழ்ச்சியில், காவல் துணை கண்காணிப்பாளர் (ஓய்வு) சி.சம்பாசிவம், பேராசிரியர்கள் ராஜமாணிக்கம், அப்துல் காதர் உள்ளிட்ட 530 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு கல்லூரி வாழ்வில் நிகழ்ந்த தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பளார் பேராசிரியர் என். ஜெயவீரன் செய்து இருந்தார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேராசிரியர் எஸ்.பி கணபதி தொகுத்து வழங்கினார். முடிவில் விலங்கியல் துறைத் தலைவர் பி. குமாரசாமி நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. மிகவும் அருமை புகைப்படங்கள் துல்லியமாக உள்ளன செய்திகளும் நன்றாக உள்ளன

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...