Pages

Sunday, January 7, 2018

அதிரை பைத்துல்மால் குவைத் கிளை மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் 2018ம் ஆண்டு முதல் கூட்டம் சால்மியா கார்டனில் கடந்த 5/1/2018 வெள்ளியன்று மஃரிபுக்குப்பின் தொடங்கி, சில குறிப்பிட்ட முக்கியமான விஷயங்களை மட்டும் மஷூரா செய்து  ஈஷா தொழுகைக்குமுன் முடிவடைந்தது.

தீர்மானங்கள்:
1. ஆதரவற்றோர் மாதாந்திர உதவித்திட்டம், RD, கழிவறை கட்டும்பணி, வட்டியில்லா கடன் திட்டம் போன்ற பைத்துல்மாலின் அளப்பெரும் பணிகளின் முக்கியத்துவத்தை விளக்கி அவற்றில் அனைவரும் பங்களித்து அல்லாஹ்வின் பேரருளைப்பெறவேண்டும் என்று தலைவர் ஜெய்னுல் ஹுசைன் விளக்கினார்.

2. கழிவறை கட்டும் திட்டத்திற்கு இதுவரை ரூ.1,26,720/- வசூலாகியுள்ளது. நம்மூரில் தூய்மைக்காகவும், நம் பெண்களின் மாணத்திற்காகவும் அனைவரும் இதில் பங்களிக்கவேண்டும். 

குறிப்பு: மிகக்குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் ஒரு இளைஞர் ஒருவர் தன வாப்பாவின் ஆதரவு இல்லாமல் தன் தாயும், சகோதர சகோதரிகளும் வறுமையில் வாடினாலும், இத்திட்டத்தின் அருமையை கருதி அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக ஒரு கழிவறை கட்ட பொறுப்பெடுத்து இதுவரை ரூ.15,000/-க்கு மேல் கொடுத்திருப்பது எல்லாருடைய கவனத்தயும் திருப்பியுள்ளது. இந்நற்செயலை கொண்டு அல்லாஹ் அவர் குடும்பத்தின் வறுமையை போக்குவானாக.

3. புதுமனை தெருவை சேர்ந்த முஹம்மது குவைத்தில் சுகக்குறைவாக இருப்பதால் அவரை நலன் விசாரிக்க செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெகு தொலைவிலிருந்து வந்த சகோதரர்கள் அஹமது மைதீன் மற்றும் முஹம்மது இப்ராஹிம் இருவருக்கும் துவா செய்து கூட்டம் நிறைவு பெற்றது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் குவைத் கிளை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...