Pages

Wednesday, January 3, 2018

மரச்செக்கு எண்ணெய் உற்பத்தியில் சகாப்தம் படைக்கும் பட்டதாரி இளைஞர் (முழு விவரம்)

பட்டுக்கோட்டை, ஜன.03
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 42). பட்டதாரி இளைஞர். இயற்கை ஆர்வலரான இவர், பட்டுக்கோட்டை பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே 'ஒளவை' மரச்செக்கு எண்ணெய் நிலையத்தை புதிதாகத் தொடங்கி நடத்தி வருகிறார். இங்கு, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை மரச்செக்கு மூலம் இயற்கையாக உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து ஒளவை நிறுவன நிர்வாகி தினகரன் கூறியது;
மாடுகட்டி நாட்டு மரச்செக்கில் எண்ணெயை உற்பத்தி செய்துகொண்டிருந்த மனிதன் பிற்காலத்தில் எப்படி, ஏன் மாறினான்? நாட்டு மரச்செக்கில் எண்ணெய் அதன் உண்மைதன்மையை இழக்காமல் பிழிந்து எடுக்கப்படுவதால் எண்ணெயின் உற்பத்தி செலவு அதிகம் அதே சமயத்தில் உற்பத்தியின் அளவு குறைவு.

சரி, நல்ல பொருள்தானே விலை அதிகமானால் பரவாயில்லை என வாங்கமுற்பட்டவர்களின் தொடர் தேவையாவது பூர்த்திசெய்யப்பட்டதா என்றால் அதுவும் இல்லை ஏனெனில் நாட்டுமரச்செக்கில் எண்ணைய் உற்பத்தி மிகக் குறைவு.

இவற்றை பூர்த்திசெய்யதான் அறிவியல் முன்னேற்றம் உள்ளே வந்தது. ஆனால் அந்த விஞ்ஞான முன்னேற்றத்தால் நன்மை மட்டுமே நடந்ததா? இந்த விஞ்ஞான முன்னேற்றம் நமக்கு கொடுத்த பரிசுதான் ரீபைண்ட் ஆயில். ரீபைண்ட் ஆயிலால் இரெண்டு விசயங்களை பூர்த்திசெய்ய முடிந்தது. ஒன்று விலை குறைவு. இரண்டு, நினைத்த நேரத்தில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கடையில் வாங்கிக்கொள்ள முடிகிறது.

எப்படி இவ்வளவு விலைக்குறைவாக ஒரு வருடத்திற்கு கெட்டுப்போகாத எண்ணையை எந்த நேரத்திலும் கொடுக்க முடிகின்றது என்பதை நாம் யோசிக்கவில்லை. பிறகு பெரும் நிறுவனங்கள் எண்ணெய் தயாரிப்பில் இறங்கியதும் நோக்கம் மாறிப்போய் முற்றிலும் வணிகம் மட்டுமே என மாறி உடல் நலன் என்பது இரண்டாம் பட்சமானது. ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்பான அணுசக்தி எப்படி அணுகுண்டாக மாறியதோ அதேபோன்று ரீபைண்ட் ஆயில் என்ரும், ஒரு மாநிலத்துக்குகூட கொடுக்கமுடியாத சூரியகாந்தி பூ இந்தியா முழுதும் சூரியகாந்தி பூ எண்ணையாகவும் (Sunflower Oil) மாறியது. பிறகு எறிபொருளுக்காக எடுக்கப்படும் கச்சா எண்ணையின் ஒரு பகுதி சமையல் எண்ணையிலும் கலக்கப்பட்டு, போலி விளம்பரத்தால் சமயல் அறையில் குடி புகுந்து மனிதகுலத்துக்கு விட்டுச்சென்ற பாதிப்புகள் ஏராளம்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்ட நம் வீட்டில் உள்ளவர்களோ அல்ல தெரிந்தவர்களோ மூட்டுவலி முழங்கால்வலி என சொல்லவது ஏன் தெரியுமா? இவர்கள் காலத்தில்தான் இவ்வகை எண்ணெய்கள் சந்தைக்கு படை எடுக்க ஆரம்பித்து விழிப்புணர்வு இல்லாமல் பயன்படுத்தபட்டது. இவை மட்டுமா? ஜீரண சக்தியில் ஏற்படும் பிரச்சனைகள், சரும பிரச்சனைகள், மூட்டு வலி பிரச்சனைகள் நல்லெண்ணயில் கலக்கப்படும் சர்க்கரை ஆலை கழிவுகளால் ஏறபடும் சர்க்கரை வியாதி, இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டினார் போன்று புற்றுநோய் என நாம் பாதிக்கப்படுவது கொஞ்சமல்ல. இப்பொழுது சொல்லுங்கள் அறிவியல் முன்னேற்றம் ஆக்கப்பூர்வமான வழிகளுக்கு மட்டுமே பயன்படுகின்றதா?

புண்ணாக்கு என்னும் பூஜ்ஜியம்
கால்நடைகளின் நலன் கருதி நீங்கள் வாங்கிபோடும் புண்ணாக்கில் எள் முனையளவும் சத்தில்லை என்பதை உணர்கின்றீர்களா?

ரோட்டரி செக்கில் ஆட்டப்படும் எள், தேங்காய் மற்றும் கடலை போன்றவற்றில் இருந்து எண்ணெய் முழுவதும் உறிஞ்சபட்டு எஞ்சி இருக்கும் பொருளையே புண்ணாக்கு என்ரு நம்பி வாங்கி கால்நடைகளுக்கு கொடுக்கின்றீர்கள் ஆனால் இவற்றில் இருக்கும் எண்ணெய் வளம்தானே சத்தின் ஆதாரம், அந்த சத்துகள் முழுவதும் பிழியப்பட்ட பொருள் பூஜ்ஜியமா இல்லையா இப்பொழுது சொல்லுங்கள்!

எண்ணெயில் இருக்கும் வைட்டமின்களும் புரத சத்துகளும் முழுமையாக உறிஞ்சப்பட்டபின் கடைகளில் இருந்து நீங்கள் வாங்கிபோடும் புண்ணாக்கில் சத்துகள் அரவே இன்றி வெரும் வயிற்றை நிரப்பும் ஒரு பொருளையே கால்நடைகளுக்கு தீனியாக போடுகின்றீர்கள். இதனால் கால்நடைகளுக்கும் பயன் இல்லை அதே சமயத்தில் சத்துகள் அற்ற ஒரு பொருளை விலைகொடுத்து வாங்கிப்போடும் உங்களுக்கும் பயன் இல்லை.

ஆனால் இதற்கு மாற்றாக மரச்செக்கில் எள், தேங்காய் மற்றும் கடலை போன்றவை ஆட்டப்படும்போது அதிகபட்சம் 70 சதவீத எண்ணெய் மட்டுமே பிழியப்படுகின்றது. இதனால் எஞ்சிய 30 சதவீத எண்ணெய் வித்துகள் விடப்பட்டு புண்ணாக்கில் சேர்கின்றது. இவையே கால்நடைகளுக்கு ஊட்டம் தரும் புண்ணாக்காகும். எனவே புண்ணாக்கு என கடைகளில் விற்கப்படும் சத்துகள் அற்ற சக்கைகளை புண்ணாக்கு என்னும் பெயரில் கால்நடைகளுக்கு வாங்கி கொடுத்து உங்கள் விலைமதிப்பற்ற நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காதீர்கள்' என்றார்.

இந்நிலையத்தில், நல்லெண்ணெய் ஆட்டுவதற்கு கலப்படமில்லாத தரமான கருப்பட்டி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கடலை மிட்டாய் தயாரிக்கப்பயன்படுத்தும் தரமான மிட்டாய் பருப்பை கொண்டு கடலை எண்ணெய், சல்பர் கலக்காத கொப்பரையை பயன்படுத்தி தேங்காய் என்ணெய் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. மேலும், தரமான பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு, தரமான மரச்செக்கு எள்ளு புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு மற்றும் கடலை புண்ணாக்கு கிடைக்கும்.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இலவச டோர் டெலிவரி வசதி உண்டு.

மேலதிக தகவல் மற்றும் நிலையத் தொடர்புக்கு;
ஒளவை மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம்.
5, பாளையம் பேருந்து நிறுத்தம்
தஞ்சை சாலை, பட்டுக்கோட்டை.
அலைபேசி: ‭+ 91 80567 28870
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...