Pages

Thursday, January 4, 2018

கட்டாய மாப்பிள்ளை ஆன இன்ஜினியர் ~ கடத்தி சென்று திருமணம்!

அதிரை நியூஸ்: ஜன.04
யாருக்காவது கல்யாணம் செய்து கொள்ள ஆசையா? வாங்க பீஹார் வரை போய் ஒரு டீ குடித்துவிட்டு குடும்பத்தோடு வரலாம்...

வினோத் குமார், பீஹார் மாநிலம் நாளந்தா மாவட்டம் பொகாரோவிலுள்ள இந்திய அரசுக்குச் (Bokaro Steel Plant) சொந்தமான இரும்பு ஆலையில் ஜூனியர் எஞ்சினியராக வேலை பார்க்கின்றார். இவர் தனது நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பாட்னா அருகிலுள்ள 'மொகாமா' எனும் ஊருக்குச் செல்கிறார். அங்கிருந்து அவர் முன்பின் தெரியாத கும்பலால் வழுக்கட்டாயமாக கடத்தப்படுகிறார்.

கடத்தப்பட்ட வினோத் குமார் தேம்பி அழ, அங்கிருந்த பெண்கள் அவரது கண்களை ஆறுதலாக துடைத்துவிட்டு 'ஏன் அழுகிறாய், உன்னை என்ன தூக்கிலா போடப்போகிறோம் கல்யாணம் தானே பண்ணி வைக்கப் போகிறோம் சந்தோஷப்படுயா' என சொல்ல, இல்லை என் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என வினோத் குமார் திமிர, பல துப்பாக்கிகள் தலையை நோக்கி குறிவைத்தன. அப்புறம் தலைப்பாகையை கட்டிக் கொண்டு மாலையை மாத்தி கட்டாய மாப்பிள்ளை ஆகிட்டாருங்க!

இந்த மாதிரி கடத்தப்பட்டு கட்டாயப்படுத்தி நடத்தி வைக்கப்படும் கல்யாணத்திற்கு 'பக்கடுவா விவாஹ்' (Pakadua Vivah) என்று பெயராம், இதெல்லாம் அங்கே ரொம்ப சாதாரணமாம். பின்னே! நல்ல வேலையில செட்டிலான மாப்பிள்ளை கேக்கின்ற வரதட்சணைக்கு நாங்க எங்கே போவோம் அதான் இப்படி! என பாயிண்ட் பிடித்து வேறு பேசுகின்றனர்.

அரசுத் தகவலின்படியே, 2016 ஆம் ஆண்டு 2,877 கட்டாய கடத்தல் கல்யாண வழக்குகள் பதிவாகியுள்ளன. 2015 ஆம் ஆண்டு 3,001 வழக்குகளும், 2014 ஆம் ஆண்டு 2,533 வழக்குகளும், 2013 ஆம் ஆண்டு 2,922 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த கட்டாய கடத்தல் கல்யாண பேர்வழிகள் ரொம்பப் பேரு பீஹாரின் பெகுசராய், பாட்னா, லக்கிசராய், முன்கர், ஜெனன்னாபாத், கயா, நவடா, ஷேக்புரா மற்றும் அர்வால் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமாம். இந்த பக்கம் போகும் போது கொஞ்சம் கவனமா போங்கப்பா!

கட்டாய கல்யாணத்திற்குப் பின் ஒருவழியாக தப்பி வந்த வினோத் குமார் கடத்தியவர்கள் மீது பட்னா சீனியர் சூப்பிரண்ட் இடம் புகார் கொடுத்துள்ளார். அந்தப் பெண்ணையோ, கடத்தியவர்களை தான் முன் பின் சந்தித்ததில்லை என்றும் அவர்களை யாரென்றே தெரியாது என்றும் விபரமாக சொல்லியுள்ளார்.

ஏம்பா பீஹாரிகளா! வட நாட்ல ரொம்ப பேரு மொட்ட பசங்களா சுத்திக்கிட்டு குடும்பஸ்தர்கள் நிலமை தெரியாம குடைச்சல் கொடுத்துக்கிட்டு இருக்கானுங்களே அவனுங்களை எல்லாம் கடத்திக்கிட்டு போயி கல்யாணம் பண்ணி வைக்க மாட்டீங்களா?

Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...